இந்தியா-ஆஸ்திரேலியா: கடந்து வந்த பாதை...

Subscribe to Oneindia Tamil

பல வெளிநாடுகளிலும் தொடர்ந்து வெற்றிவாகை சூடி வந்த ஆஸ்திரேலியா மிகுந்தநம்பிக்கையோடு தான் இந்தியா வந்தது. தொடர்ந்து இங்கும் வெற்றி கனியை பறித்துச்செல்லலாம் என எண்ணியது. பலரும் அப்படித்தான் நினைத்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும், பலர் எண்ணியதும் சரிஎன்பது போலவும் 3 போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவென்றது. இதன் மூலம் தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே நாடுஎன்ற பெருமையைப் பெற்றது.

ஆனால் இதையடுத்து நடந்த இரண்டு போட்டியிலும் இந்தியா வென்றது.

டெஸ்ட் தொடரில் வென்ற இந்தியா, பெரும் தெம்புடன் ஒரு நாள் தொடரில்இறங்கியது. முதல் போட்டியில் வெற்றியும் பெற்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாட்டு பற்றிய சில புள்ளி விவரங்கள்:

இதுவரை இந்தியா -ஆஸ்திரேலியா இடையே 62 ஒரு நாள் போட்டிகள்நடைபெற்றுள்ளன. இதில் 20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றன. 42 போட்டிகள்வெளிநாடுகளில் நடைபெற்றன.

62 போட்டிகளில் இந்தியா 23 போட்டிகளில் வெற்றி பெற்றது. 36 போட்டிகளில்தோல்வியுற்றது. 3 போட்டிகள் வெற்றி தோல்வி ஏதும் இல்லாமல் டையில்முடிவடைந்ததது. இந்தியா வென்ற 23 போட்டிகளில் 9 போட்டிகள் இந்தியாவிலும், 14போட்டிகள் வெளிநாடுகளிலும் நடை பெற்றன.

இந்தியா தோல்வியுற்று 36 போட்டிகளில் 8 போட்டிகள் இந்தியாவிலும், 28போட்டிகள் வெளிநாடுகளலும் நடைபெற்றன.

வெற்றி தோல்வியின்றி டையில் முடிவடைந்த 3 போட்டிகளும் இந்தியாவில்நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்ற 62 ஒரு நாள் போட்டிகளில் 23 பேர்சதம் அடித்துள்ளனர். இவர்களில் 11 பேர் இந்திய வீரர்கள். 22 பேர் ஆஸ்திரேலியவீரர்கள்.

இந்தியாவின் சார்பில் டெண்டுல்கர் அதிகபட்சமாக 143 ரன் எடுத்துள்ளார். இவர்ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 சதம் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சார்பில் அதிகபட்சமாக மார்க் வா 126 ரன் எடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+