ஹாங்காங் செல்கிறார் சோனியா காந்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஹாங்காங்கில் வாழும் இந்தியர்கள் நடத்தும் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொளவதற்காக அகில இந்தியகாங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங் செல்கிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஹாங்காங்கில் வாழும் இந்தியர்கள் நடத்தும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சோனியா காந்திக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை சோனியா காந்தி ஹாங்காங் செல்கிறார். சோனியாவுடன் காங்கிரஸ்கட்சியின் பொதுச்செயலாளர் அம்பிகா சோனி, காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுத்துறை ஒருங்கிணைப்பாளர்கே.நட்வார் சிங் ஆகியோரும் செல்கின்றனர்.
ஹாங்காங் மாகாண நிர்வாகி டங் ஸீ ஹூவா, சோனியா காந்திக்கு சிறப்பு விருந்து அளித்து கெளரவிக்க உள்ளார்என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications