எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை. பட்டமளிப்பு விழா
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் 11வது பட்டமளிப்பு விழாவில்7,551 மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பட்டமும்,டிப்ளமோவும் வழங்கப்படவுள்ளன.
இது குறித்து எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் துணைவேந்தர் டாக்டர் அனந்தகண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல்கலைகழகத்தின் 11-வது பட்டமளிப்புவிழா இந்த மாதம் 28-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 2,603 மாணவர்கள் நேரில்வந்து பட்டம் பெறுகிறார்கள். 4,948 மாணவர்களுக்கு தபால் மூலம் பட்டம் அனுப்பிவைக்கப்படும்.
37 மாணவர்களுக்கு தங்கப்பதக்கமும், 17 மாணவர்களுக்கு வெள்ளிப்பதக்கமும்வழங்கப்படும்.
பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கை 176லிருந்து188ஆக உயர்ந்துள்ளது.
இன்டர்நெட் மூலமான மருத்துவ சேவை, மருத்துவ கல்விக்கும் பல்கலைக்கழகம்ஏற்பாடு செய்து வருகிறது.
இரண்டாண்டு எம்.எஸ்சி (தொற்றுநோயியல்) படிப்பும், இரண்டாண்டு எம்.டி (இரத்தஎதிர்பு சக்தி மற்றும் ரத்த மாற்று) படிப்பும் துவங்கப்படவுள்ளன என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications