பரபரப்பில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித்தளம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்படவுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளம் மிகுந்த பரபரப்புடன காணப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் நூற்றுக்கணக்கானவிஞ்ஞானிகளும், தொழிலாளர்களும் ராக்கெட் ஏவப்படுவதற்கு முன் செய்யப்பட வேண்டிய சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

விண்வெளித்தளத்தை சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. துப்பாக்கிய ஏந்திய சிறப்பு அதிரடிப்படையின் ஏவுதளத்தை சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்று துவங்கிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்படுவதற்கான கவுண்ட்டெளன் எந்தவிதமான பிரச்சனையும்இன்றி தொடர்ந்து நடந்து வருகிறது. 58 மணி நேரம் இந்த கவுண்ட்டெளன் தொடரும். நாளை பிற்பகல் 3.47 மணிக்குகவுண்ட்டெளன் முடியும். அடுத்த வினாடியே ராக்கெட் விண்ணில் பறக்கும்.

கவுண்ட்டெளன் 15 மணியை அடையும்போது (ராக்கெட் பறக்க 15 மணி நேரம் இருக்கும்போது) ராக்கெட்டின் மூன்றாவது 3வதுஸ்டேஜ் மோட்டாரில் எரிபொருள் நிரப்பப்படும். கவுண்ட்டெளன் 9 மணியை அடையும்போது 2வது ஸ்டேஜ் மோட்டாரிலும்,ராக்கெட் பறக்க 4 மணி நேரம் இருக்கும்போது 3வது ஸ்டேஜ் மோட்டாரில் எரிபொருள் (திரவ நிலையில் இருக்கும் ஆக்சிஜன்,ஹைட்ரஜன் தான் எரிபொருள்) நிரப்பப்படும்.

முதல் ஸ்டேஜ் மோட்டாரை சுற்றி 4 சிறிய ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ராக்கெட் உயரே கிளம்ப உந்து சக்திஅளித்து உதவும். இந்த சிறிய ராக்கெட்டுகளில் டைமெத்தைல் என்ற வேதிப்பொருள் எரிபொருளாக நிரப்பப்படும்.

இந்த ராக்கெட் 1,540 கிலோ எடையுள்ள செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும். பூமியிலிருந்து கிளம்பிய 1,040வினாடிகளில் இந்த ராக்கெட் புவி வட்டப் பாதையை (சுமார் 36,000 கி.மீ.) அடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+