கருணாநிதி சந்தித்த தேர்தல்கள்: ஒரு பிளாஷ்பேக்
சென்னை:
தமிழக முதல்வர் கருணாநிதி போட்டியிடும் 10வது சட்டசபைத் தேர்தல் இது. இதுவே தனது இறுதித் தேர்தலாகஇருக்கும் எனவும் கருணாநிதி மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
முதன்முதலாக 1957ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடத் தொடங்கிய கருணாநிதி 1996ம் ஆண்டு வரை பலமுறைதேர்தலில் போட்டியிட்டுள்ளார். இதுவரை 9 முறை வெற்றி பெற்றுள்ளார்.
1996ம் ஆண்டுதான் தேர்தலில் அதிகபட்சமாக 35,784 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மிகவும் குறைவாக 699 வாக்குகள் வித்தியாசத்தில் 1980ம் ஆண்டு அண்ணாநகர் தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் ஹண்டேவைத் தோற்கடித்தார்.
இதுவரை நடந்த சட்டசபைத் தேர்தல்களில் முதல்வர் போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் அவர் பெற்ற வாக்குகள்குறித்த விவரம் வருமாறு:
1957- குளித்தலை தொகுதி:
கருணாநிதி: 22,785
காங்.வேட்பாளர் கே.ஏ.தர்மலிங்கம்: 14,489
வாக்கு வித்தியாசம்: 8,296
1962-தஞ்சாவூர் தொகுதி:
கருணாநிதி: 32,145
காங். வேட்பாளர் பரிசுத்த நாடார்: 30,217
வாக்கு வித்தியாசம்: 1,928
1967- சைதாப்பேட்டை தொகுதி:
கருணாநிதி: 53,401
காங். வேட்பாளர் விநாயகமூர்த்தி: 32,919
வாக்கு வித்தியாசம்: 20,482
1971- சைதாப்பேட்டை தொகுதி:
கருணாநிதி: 63,334
காங். வேட்பாளர் குடந்தை ராமலிங்கம்: 50,823
வாக்கு வித்தியாசம்: 12,511
1977- அண்ணாநகர் தொகுதி:
கருணாநிதி: 43, 076
அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி: 26,638
வாக்கு வித்தியாசம்: 16,438
1980 - அண்ணாநகர் தொகுதி:
கருணாநிதி: 51, 290
அதிமுக வேட்பாளர் எச்.வி.ஹண்டே: 50, 591
வாக்கு வித்தியாசம்: 699
(1984 ம் ஆண்டு முதல் 1986 வரை மேலவை உறுப்பினராக கருணாநிதி இருந்தார்)
1989 துறைமுகம் தொகுதி:
கருணாநிதி: 30,932
முஸ்லீம் லீக் வேட்பாளர் வகாப்: 9,641
அதிமுக (ஜெ.) வேட்பாளர் பட்டாபிராமன்: 8,086
அதிமுக (ஜா.) வேட்பாளர் காஜாமொய்தீன்:7,055
வாக்கு வித்தியாசம்: 31,991
1991 - துறைமுகம் தொகுதி:
கருணாநிதி: 30,932
காங்கிரஸ் வேட்பாளர் கே.சுப்பு: 30,042
வாக்கு வித்தியாசம்: 890
1996 - சேப்பாக்கம் தொகுதி:
கருணாநிதி: 46,097
காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணன்: 10,313
வாக்கு வித்தியாசம்: 35,784












Click it and Unblock the Notifications