உடைந்தது ஜாதிக் கட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செங்குந்த முதலியார்கள் அதிகம் மிகுந்த ஏ.சி.சண்முகத்தின் தலைமையில் உருவான புதிய நீதிக்கட்சியில் பிளவுஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட புதிய நீதிக்கட்சி எடுத்த முடிவுக்கு கட்சியின்துணைத்தலைவர் சுதானந்தம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர், திமுகவுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக கருணாநிதியை தனியே சந்தித்துப்பேசவும திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள முதலியார் இனத்தவர் ஒன்று சேர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 15 ம் தேதி புதியநீதிக்கட்சியைத் தொடங்கினர். தமிழகத்தின் வடமாவட்டங்களிலும், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும்இவர்களுக்கு அதிக செல்வாக்கு உள்ளது.

3 வது அணி:

இதற்கிடையே, தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கட்சியின் நிறுவனத் தலைவர்ஏ.சி.சண்முகம், காங்கிரஸ் மற்றும் த.மா.கா வுடன் சேர்ந்து 3 வது அணி அமைக்க முயற்சித்து வந்தார். ஆனால்அவ்விரு கட்சிகளும் அ.தி.மு.க. வுடன் இணைந்தன.

இவர்களுடன் இருந்த மக்கள் தமிழ் தேசம், கொங்கு நாடு மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில்சேர்ந்தன.

இதையடுத்து புதிய நீதிக்கட்சிக்கு தி.மு.க. வலை விரித்தது. 3 வது அணி வெறும் கானல் நீராகிப் போன பட்சத்தில்,தி.மு.கவுடன் கூட்டணி சேரத் தயார். ஆனால் 30 தொகுதிகள் வேண்டும் என்றார் ஏ.சி.சண்முகம்.

ஆனால் தி.முக.வோ 5 இடங்கள் மட்டுமே ஒதுக்குவதாகக் கூறியது. அதிருப்தியடைந்த ஏ.சி.சண்முகம் தனித்துப்போட்டியிடலாம் என்று தீர்மானித்தார். கட்சியின் பிரதிநிதிகள் அனைவரும் தனித்துப் போட்டியிடுவதற்கு ஆதரவுதெரிவித்தனர்.

இதற்கு கட்சியின் துணைத்தலைவர் சுதானந்தன் எதிர்ப்புத் தெரிவித்தார். புதிதாகத் தொடங்கப்பட்ட நமது கட்சிதனித்துப் போட்டியிடத் தேவையில்லை. நாம் தி.மு.க. கூட்டணியுடன் சேர்ந்துதான் தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என்றார்.

துணைத் தலைவர் புறக்கணிப்பு:

தனித்துப் போட்டியிடுவதா? அல்லது தி.மு.க. கூட்டணியுடன் சேர்வதா என்று விவாதிப்பதற்காக புதியநீதிக்கட்யின் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை அவசரமாகக் கூடியது. அப்போது கட்சியின் 99 சதவீதபிரதிநிதிகள் தனித்துப் போட்டியிடுவதே சிறந்தது என்று கருத்துத் தெரிவித்தனர். இந்த செயற்குழுக் கூட்டத்தைசுதானந்தம் புறக்கணித்தார்.

ஈரோட்டிலிருந்து அறிக்கை:

இதற்கிடையில் கட்சியின் துணைத் தலைவரான சுதானந்தம் ஈரோட்டிலிருந்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், கட்சியின் நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். என்னிடம் எந்தமுடிவுகளையும் கலந்தாலோசிப்பதில்லை. தேர்தலில் எங்களது நிலை குறித்துத் தெரிவிக்க விரைவில் முதல்வர்கருணாநிதியை சந்திக்கவுள்ளேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனித்துப் போட்டியிடுவதற்கு சுதானந்தன் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் புதிய நீதிக்கட்சி உடைவது உறுதியாகிவிட்டது. இதனால் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய நீதிக்கட்சியில் பிளவு ஏற்படும்எனத் தெரிகிறது.

தி.மு.க. கூட்டணியுடன் இணைய சுதானந்தன் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். மேலும் இதுதொடர்பாக ஏற்கனவேமுதல்வர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் அவருக்கு ஈரோடுதொகுதி வழங்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+