அந்த கடைசி வினாடியில்....
ஸ்ரீஹரிகோட்டா:
ராக்கெட்டை செலுத்தும் பணி தோல்வியடைந்த பின்னர் மிகுந்த கவலைதோய்ந்த முகத்துடன் காணப்பட்ட இந்தியவிண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் தனது சகாக்களுடன் ஆலோசனை நடத்தியபின்னர் உடனடியாக நிருபர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில்,
ராக்கெட்டை ஏவுவதற்கு 10 நிமிடங்கள் இருந்த நிலையில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் விஞ்ஞானிகளிடமிருந்துகம்ப்யூட்டருக்கு மாற்றப்பட்டன. ராக்கெட்டை தரையிலிருந்து கிளப்ப உதவும் 4 சிறிய ஸ்ட்ராப் ஆன்மோட்டார்களை கம்ப்யூட்டர் இயக்கியது.
அந்த மோட்டர்களில் ஒன்று மட்டும் சரியாக இயங்கவில்லை. 4 மோட்டர்களும் 90 சதவீத அளவுக்கு உந்துசக்தியை தந்தால் தான் ராக்கெட்டின் முக்கியமான என்ஜின் இயக்கப்படும். ஆனால், ஒரு மோட்டர் சரியாகஇயங்காததை 3 வினாடிகளில் கம்ப்யூட்டர் உணர்ந்து கொண்டுவிட்டது. இதனால், ராக்கெட்டின் என்ஜினைகம்ப்யூட்டர் இயக்கவில்லை. உடனடியாக ராக்கெட் ஏவப்படுவதையும் கம்ப்யூட்டரே நிறுத்திவிட்டது.
இது எல்லாம் ராக்கெட்டின் முக்கிய என்ஜின் இயக்கப்படுவதற்க ஒரு நொடிக்கு முன் நடந்தது. இதன் மூலம்ராக்கெட்டை நம்மால் காப்பாற்றி விட்டோம்.
இந்தத் தகவலை பிரதமரிடமும் தெரிவித்துவிட்டேன். அவரும் நம்மைப் போலவே மிகவும் வருத்தமடைந்தார்.ஆனால், ஆராய்ச்சிகளில் இது எல்லாம் சகஜம் தான். இந்தத் தோல்வியால் விஞ்ஞானிகள் சோர்ந்துவிடக் கூடாதுஎனவும் வாஜ்பாய் கூறினார்.
விரைவிலேயே குறையைப் போக்கி ராக்கெட்டை ஏவுவோம் என பிரதமரிடம் தெரிவித்தேன்.
இப்போதுள்ள ஆரம்பகட்ட விவரங்களை வைத்துத் தான் ராக்கெட் ஏன் பறக்கவில்லை என்பதைவிளக்கியுள்ளேன். இன்னும் முழு விவரங்கள் தெரியவில்லை.
இரவும் பகலும் நாங்கள் உழைப்போம். பிரச்சனை எங்கு நடந்தது என்பதை அறிந்த பின்னர் அதை உடனடியாகநீக்கி மீண்டும் ஜி.எஸ்.எல்.வியை பறக்க வைப்போம்.
நமக்கு இது மிகப் பெரிய ஏமாற்றம் தான் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications