ஜெ. முதல்வரானால் ஆபத்து: கிருஷ்ணசாமி எச்சரிக்கிறார்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதாமுதல்வராக ஆனால், தலித்கள், உ ழைப்பாளிகள்உள்பட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆபத்து என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிகூறியுள்ளார்.
சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களை கிருஷ்ணசாமி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதுரையில் நடந்த எங்கள் கட்சியின் செயல் வீரர் கூட்டத்தின் போது கூடிய கூட்டம், தேசிய ஜனநாயககூட்டணியின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது.
சட்டசபைத் தேர்தலில் நள்ளிரவு 12 மணி வரை பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகள் அனுமதி கோரியுள்ளன.அப்படி அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அமைதியான முறையில் வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய வேண்டும்.கிராமங்களில் சிறு வேன்களில் சென்று பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்கக் கூடாது. அப்படி நடந்தால் தாழ்த்தப்பட்டவர்கள்,உழைப்பாளிகள், ஏழைகள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ஆபத்து நேரிடும்.திமுக தலை மையிலான கூட்டணிக்குத்தான் இந்த முறை மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.
புதன்கிழமை முதல் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறேன். 31-ம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்திலும், 1-ம்தேதி முதல் 3-ம் தேதி வரை தஞ்சாவூரிலும், 6-ம் தேதி முதல் 8ம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்திலும், 11-ம்தேதி முதல் 14-ம் தேதி வரை மதுரை மாவட்டத்திலும் பிரசாரம் செய்கிறேன்.
நான் மீண்டும் ஓட்டப்பிடாரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன். கடந்த 50 ஆண்டுகளாக இந்தத் தொகுதிபுறக்கணிக்கப்பட்டு வந்தது. நான் எம்.எல். ஏவான பிறகுதான் தொகுதிக்கு விமோசனம் பிறந்தது. எனவேதொகுதியை மாற்றத் தேவையில்லை. அங்குதான் மீண்டும் போட்டியிடுவேன் என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications