த.மா.காவில் இருந்து ப.சி. நிரந்தர நீக்கம்?
சென்னை: சென்னையில் புதன்கிழமை கூடும் த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழு ப.சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவு செய்ய உள்ளது.
த.மா.கா.வில் இருந்து கொண்டே த.மா.கா. ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பை தொடங்கிய ப.சிதம்பரம் த.மா.கா.வில் இருந்துதற்காலிகமாக நீக்கப்பட்டார்.
பின்னர் அவரை ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கக் கூடாது என விளக்கம் அளிக்க கோரி த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழுநோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு சிதம்பரம் அளித்த பதிலில், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதை எதிர்ப்பதற்கான காரணங்கள் கூறப்பட்டு இருந்தன.
ஆனால், தனியாக இயக்கம் ஆரம்பித்தது பற்றியோ, திமுகவை ஆதரிப்பதாக தெரிவித்தது பற்றியோ அவர் தனது பதிலில் குறிப்பிடவில்லை.
இதனை பெற்றுக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகுழு சிதம்பரம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய புதன்கிழமை சென்னையில் கூடுகிறது.
இக்கூட்டத்தில், சிதம்பரத்தை நீக்கம் செய்யும் அதிகாரம் மூப்பனாருக்கு அளிக்கப்படலாம். த.மா.கா.வை ஆரம்பித்த போதும் அதன் பிறகும்பல்வேறு சந்தர்ப்பங்களில் சிதம்பரத்தின் ஆலோசனைகளை கேட்டவர் மூப்பனார்.
அவர் சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்க விரும்பவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை வெளிப்படையாக எதிர்த்ததால் கட்சியின் பல்வேறுதலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் தற்காலிக நீக்கம் செய்தார்.
ஆனால், சிதம்பரத்தை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க த.மா.கா.வில் உள்ள சிதம்பரத்தின் எதிர்ப்பாளர்கள் தீவிரமாக உள்ளனர்.
இதனால், மூப்பனார் வேறு வழியின்றி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையை ஏற்று தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications