ஜூன் 21ல் முழு சூரிய கிரகணம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
புத்தாயிரமாண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இந்த ஆண்டு ஜுன் மாதம் 21ம் தேதிநிகழவிருக்கிறது.
இந்த தகவலை நேரு கோளரங்கத்தின் விஞ்ஞானி டாக்டர் அடூர் தெரிவித்தார். இந்தகிரகணம் இந்தியாவில் தெரியாது. இது அங்கோலா, ஜாம்பியா, மடகாஸ்கர் மற்றும்மொரீஷியஸ் நாடுகளில் தெரியும் என்றார்.
பூரண சூரியகிரகணம் 3 நிமிட நேரம் நீடிக்கும். இந்த சூரியகிரகணத்தைக் காண 20பேர் கொண்ட குழு ஆப்பிரிக்கா செல்லவிருக்கிறது. இந்த குழுவிற்கு டாக்டர் அடூர்தலைமை வகிக்கிறார்.
இந்த குழுவில் வானியல் ஆய்வு வல்லுனர்களும், பயிற்சியாளர்களும் பங்குபெறுகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications