தி.மு.கவில் சீட் கேட்டிருந்த பெண் படுகொலை
சென்னை:
வரும் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட சீட் கேட்டிருந்த ஊராட்சி ஒன்றியத்தலைவி பட்டப் பகலில் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை அருகே உள்ள வண்டலூர் பகுதியில் ஊரப்பாக்கம் என்ற ஊராட்சி உள்ளது.இதன் தலைவியாக இருந்தவர் மேனகா (வயது 38). இவர் தி.மு.க. பிரமுகர். தி.மு.க.சார்பில் செங்கல்பட்டு சட்டசபைத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார்.நான்கு நாட்களுக்கு முன்பு கருணாநிதி நடத்திய நேர் காணலிலும் பங்கேற்றிருந்தார்.
வியாழக்கிழமை காலை வழக்கம் போல தனது ஊராட்சி அலுவலகத்தில் பணியில்ஈடுபட்டிருந்தார் மேனகா. அப்போது பிற்பகல் 12 மணியளவில் 2 ஆட்டோக்களில்ஒரு கும்பல் வந்தது. அவர்கள் கையில் கத்தி, அரிவாள், வேல் கம்பு போன்ற பயங்கரஆயுதங்கள் இருந்தன.
ஆட் டோக்களில் இருந்து இறங்கிய அவர்கள் அலுவலகத்தில் இருந்த மேனகாவைசரமாரியாக வெட்டித் தள்ளினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த மேனகா அங்கேயேஇறந்தார். அதன் பின்னர் அக்கும்பல் தாங்கள் வந்த ஆட்டோக்களிலேயே ஏறித்தப்பியது.
சம்பவம் குறித்து அறிந்த செங்கல்பட்டு சரக டி.ஐ.ஜி. ஜாபர் சேட், மாவட்ட எஸ்.பி.குணசீலன் ஆகியோர் ஊரப்பாக்கம் விரைந்து வந்தனர். முன் பகை காரணமாகமேனகா கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்ததால், இந்தத் தொகுதியில்திமுக சார்பில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த எதிர் கோஷ்டி போட்டி காரணமாகவும்இவரைக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பெண் ஊராட்சி தலைவி படுகொலை சம்வபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்புநிலவுகிறது. ஊரப்பாக்கத்தில் இப்படிப்பட்ட படு கொலைச் சம்பவங்கள் நடப்பதுபுதிதல்ல.
கடந்த 2 ஆண்டுகளில் இப்பகுதியில் 11 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இது12-வது சம்பவமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications