ரயில்வே பார்சலில் சிறுத்தைத் தோல்கள்
திருப்பூர்:
திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த பார்சலில் 29 சிறுத்தைத் தோல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை50 கிலோ எடையுள்ளவை.
இந்த பார்சல் யாரிடமிருந்து வந்தது என்பது பற்றி வனத் துறையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில்ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் ரயில் நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு பார்சல் வந்தது. குறிப்பிட்ட முகவரி இல்லாமல்,ரயில்வே நிலையம், திருப்பூர் என்ற முகவரியில் வந்த அந்தப் பார்சலை ரயில்வே துறையினர் பாதுகாப்பாகவைத்திருந்தனர்.
4 மாதங்களுக்கும் மேலானதால் அந்த பார்சல் குறித்து சந்தேகமடைந்த ரயில்வே துறையினர் பிரித்துப் பார்த்தனர்.அப்போது அதில், பல மிருகங்களின் தோல்கள் இருந்தன. இதில் 29 சிறுத்தை தோல்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக உடனடியாக கோவை வனத் துறையினருக்கு, ரயில்வே துறையினர் தகவல் கொடுத்தனர். கோவைவனத் துறையினர் உடனடியாக அந்த பார்சலைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications