விண்டோஸ், லினக்ஸை தாக்கும் வினக்ஸ் வைரஸ்
சான் பிரான்ஸிஸ்கோ:
விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இரண்டையும் தாக்கும் புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
முதல் முறையாக விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களை பாதிக்கக்கூடிய டபிள்யூ32.வினக்ஸ் என்ற வைரஸ் பற்றியதகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்கள், விண்டோஸ் அல்லது லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டங்களில் ஏதாவது ஒன்றை மட்டுமே பாதித்து வந்தன.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் இரண்டு ஆபரேட்டிங் சிஸ்டங்களையும் பாதிக்க கூடியதால் அவற்றிற்கு வினக்ஸ் (விண்டோஸ் + லினக்ஸ்) எனபெயரிட்டு உள்ளனர்.
மற்ற வைரஸ்களை போல் பாதிப்பை ஏற்படுத்தாது இந்த வினக்ஸ் வைரஸ். இதுவரை எந்த கம்ப்யூட்டரையும் இந்த வைரஸ் பாதித்ததாக தகவல்களும்இல்லை.
இந்த வைரஸ்களால் பாதிக்கப்பட்ட புரோகிராம்களை டபுள் கிளிக் செய்தால் இவை தங்களது வேலையை துவக்கி விடும். இந்த வினக்ஸ் வைரஸ்மற்றவை போல் வேகமாக பரவக்கூடியது அல்ல.
இன்டர்நெட் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களுக்கு பரவாது. அது போல் இந்த வைரஸ்கள் பெண்டியம் பிராசசர்கள் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களைமட்டுமே பாதிக்கிறது. இத்தகைய வைரஸ்கள் உருவாக்க சாத்தியமில்லை என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த வைரஸ் உண்மையாக இருந்தால், அது வைரஸ்களை உருவாக்குபவர்களின் திறமையில் ஏற்பட்டுள்ளமுன்னேற்றத்தையே குறிக்கும் என்கிறார் கீத் பீர். இவர் வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை உருவாக்கும் நிறுவனமான மெதினாவின் நிர்வாகி.
ஆனால், இத்தகைய வைரஸ் பற்றி தகவல் இல்லை என்கிறது ஆன்டி வைரஸ் புரோகிராம்களை உருவாக்கும் மற்றொரு நிறுவனமான மெக்காஃபிடாட் காம்.
வினக்ஸ் என இந்த வைரஸிற்கு பெயரிட்டவர்கள் சென்ட்ரல் கமாண்ட் நிறுவனத்தினர். செக். குடியரசு பகுதியில் இருந்து இ-மெயில் மூலம் இந்த வைரஸ்இவர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த வைரஸை உருவாக்கியவர் பெயர் பென்னி என குறிப்பிடப்பட்டு உள்ளது. இவர் வைரஸ்களை உருவாக்கி வரும் 29 ஏ என்ற அமைப்பை சேர்ந்தவர்என கருதப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications