அதிமுகவிடம் பா.ம.க. கேட்கும் தொகுதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெற்றிவாய்ப்பு உள்ள 42 தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் அளித்துள்ள பா.ம.க. அதில் இருந்து 27 தொகுதிகளை அதிமுக தலைமை ஒதுக்கும் என்றுநம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

பா.ம.க அளித்துள்ள 42 தொகுதிகளில் 5 தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகள் எனப்படும் எஸ்.சி./எஸ்.டியினர் போட்டியிடும் தொகுதிகளாகும்.

தலித்துகளுக்கு எதிரான கட்சி பா.ம.க என்ற முத்திரையுடன் உள்ள போதும், இத்தொகுதிகளில் பா.ம.க. தனது தலித் வேட்பாளர்களை நிறத்தினால்வெற்றி பெறுவோம் என்கிறது பா.ம.க.

ஏற்கனவே, எம்.பி. தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தலித் எழில்மலை, இ.பொன்னுச்சாமி ஆகியோர் பா.ம.க. சார்பில் வெற்றிபெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ம.க. அளித்துள்ள தொகுதிகளின் பட்டியல்:

சேலம் 2, தர்மபுரி, மொரப்பூர், பென்னாகரம், தாரமங்கலம், பாலக்கோடு, காவேரிப்பட்டினம், ஓமலூர், எடப்பாடி, கபிலர்மலை, வேலூர்,பேரணாம்பட்டு(ரிசர்வ்), குடியாத்தம், வந்தவாசி(ரிசர்வ்), பவானி,கோபி, சத்தியமங்கலம், பூம்புகார், குத்தாலம், திருவிடைமருதூர், நாமக்கல் அல்லதுசேந்தமங்கலம்(ரிசர்வ்), ஆத்தூர், சின்னசேலம், அரியலூர், கடலாடி, முதுகுளத்தூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், வானூர்(ரிசர்வ்), விழுப்புரம், புவனகிரி,காட்டுமன்னார்கோவில்(ரிசர்வ்), சிதம்பரம், விருத்தாசலம், தென்காசி, கடலூர், நெல்லிக்குப்பம் அல்லது பண்ருட்டி, சைதாப்பேட்டை, செங்கல்பட்டு.

பா.ம.கவிற்கான தொகுதிகளே இன்னும் முடிவாகாத நிலையில் பல தொகுதிகளுக்கு தனது வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது அக்கட்சி.

பென்னாகரம்(ஜி.கே.மணி), தாரமங்கலம்(கோவிந்தன்), எடப்பாடி(கணேசன்), ஆண்டிமடம்(ஜெ.குரு), புவனகிரி(பு.தா.அருள்மொழி),பாலக்கோடு(பி.சி.தர்மராஜன்), தர்மபுரி(கி.பாரிமோகன்), சேலம் 2(கார்த்தி), கடலூர்(வேல்முருகன்), சைதாப்பேட்டை(சைதை சிவா),செங்கல்பட்டு(திருக்கச்சூர் ஆறுமுகம்), நாமக்கல்(உதயரசு).

பா.ம.க.வின் தென்மாவட்ட செயலாளர்களான கனி, முருகவேல்ராஜன், பூபதிராஜா(காமராஜரின் சகோதரி பேரன்)ஆகியோரோடு கட்சியின்பொருளாளர் ஆப்ரஹாம் ராயனும் தேர்தலில் சீட் கிடைக்கும் என்ற ஆசையில் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+