ராஜாராமை முதல்வராக்குவோம்: 3வது அணியின் "மிரட்டல்
சென்னை:
3-வது அணி என்று தங்களைக் கூறிக் கொள்ளும் 24 கட்சிகள் அடங்கிய மக்கள் ஜனநாயக முன்னணி, தாங்கள் ஜெயித்து வந்தால் முன்னாள்அமைச்சர் க.ராஜாராமைமுதல்வர் பதவியில் அமர்த்துவோம் எனக் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் திமுக, அதிமுக அணிகளுக்கு மாற்று இல்லை என்று அனைவரும் நினைத்துக் கொண்டுள்ள நிலையில், அதெல்லாம் கிடையாது, அவர்களுக்குப்போட்டியாக நாங்கள் இருக்கிறோம் என்று மார் தட்டியுள்ளது மக்கள் ஜனநாயக முன்னணி.
தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ள கட்சிகள் போக எஞ்சி இருக்கிற குட்டிக் கட்சிகள் எல்லாம் இந்த அணியில் இடம் பெற்றுள்ளன.இந்தக் கூட்டணிக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுக தலைமை தாங்குகிறது.
முன்னாள் அமைச்சரும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அதிமுகவின் தலைவருமான க.ராஜாராம், கூட்டணித் தலைவராகவும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தலைவர் ஜி.ஏ.வடிவேலு செயல் தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 24 கட்சிகள் இந்தக் கூட்டணியில் இருப்பதாக இவர்கள்கூறுகிறார்கள்.
கட்சியின் செயல்பாடுகள், தேர்தல் வியூகம் குறித்து கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜாமுகமது (இவரும் ஒரு முன்னாள் அமைச்சர்தான்) செய்தியாளர்களிடம்கூறியதாவது:
10 நாட்களில் கட்சியின் தொடக்க விழா நடைபெறும். முன்னாள் பிரதமர் தேவெ கெளட துவக்கி வைப்பார்.
234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் டிராக்டர் சின்னத்தில் நிற்போம்.
மொழி, இன, சிறுபான்மை விகிதாச்சார அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கண்டிப்பாக உண்டு.
எங்களது 3-வது அணி ஆட்சியைப் பிடித்தால், நிச்சயம் க.ராஜாராம் தான் முதல்வர். எங்கள் அணிக்கு வருமாறு வாழப்பாடி ராமமூர்த்தியிடம்பேசியுள்ளோம். நம்பிக்கை தரும் விதத்தில் பேசியுள்ளார். அப்படி அவர் வந்தாலும் கூட ராஜாராம் தான் முதல்வர். அதில் மாற்றமில்லை. வைகோகூட எங்கள் அணிக்கு வரலாம்.
அவர்களுக்குத் தேவையான சீட்டுக்களை விட்டுத் தர தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.
பின்னர் "எதிர்கால முதல்வர் ராஜாராம் பேசுகையில், நாங்கள் சாதாரணமான ஆட்கள் இல்லை. கடந்த தேர்தல்களில் பயங்கரமாக ஓட்டுக்கள்வாங்கி ஜெயித்தவன் நான். இந்த அணிதான் வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications