மதிமுகவுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி மீண்டும் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுகவுடன் இனி கூட்டணியே சாத்தியமில்லை என திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திட்டவட்டமாகக்தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியல் நாளை வெளியிடப்படும்.
எங்களை வெளியே தள்ள திமுக முயல்கிறது என வைகோ பேசியுள்ளார். நான் இது போன்ற மிகக் கடுமையானவார்த்தைகளை உபயோகிக்கவே இல்லை. இனி மறுபரிசீலனைக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.
வைகோவுடன் இனி கூட்டணி இல்லை. அவ்வளவு தான்.












Click it and Unblock the Notifications