ஈரோடு மாவட்டத்தில் திமுக-அதிமுக நேரடி மோதல்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

அ.தி.மு.க வின் கோட்டையாக விளங்கும் ஈரோடு மாவட்டத்தின் பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இடையே நேரடி மோதல்இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக அ.தி.மு.கவிற்குச் சாதகமான தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களில் முன்னிலை வகிப்பதுஈரோடு மாவட்டம் தான்.

ஆனால், கடந்த தேர்தலில் அ.தி.மு.க எதிர்ப்பு அலை வீசியதால், தி.மு.க கூட்டணி அத்தனை இடங்களையும் கைப்பற்றியது. இம்முறை நிலைமை தலைகீழாகமாறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க வும் , தி.மு.க.,வும் நேரடியாக மோதிக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 7தொகுதிகளில் அ.தி.மு.கவும், தி.மு.கவும் நேரடியாக களத்தை சந்திக்கவுள்ளன.

அ.தி.மு.க. அணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரசுக்கு பெருந்துறை தொகுதியும், பவானி தொகுதியும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. மீதமுள்ள 8தொகுதிகளிலும் அ.தி.மு.க. நேரடியாக போட்டியிட வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

இதே போல் தி.மு.க. அணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக் கட்சிக்கு ஈரோடு அல்லது பவானி தொகுதி ஒதுக்கப்படலாம். கொங்கு மக்கள் கட்சிக்குபெருந்துறைத் தொகுதி ஒதுக்கப்படலாம்.

திமுக அணியில் ம.தி.மு.க இடம் பெற்றால், சத்தியமங்கலம் அந்த கட்சிக்கு கிடைக்கலாம். இதற்கு இப்போது வாய்ப்பு மிமிமிமி....மிக...மிகக் குறைவு.மீதமுள்ள தொகுதிகளில் நேருக்கு நேர் மோதிப் பார்க்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

கடந்த முறை தேர்தலில் அந்தியூர் தனித் தொகுதி சார்பாக தேர்வு செய்யப்பட்ட செல்வராசும், பவானி தெகுதியில் தேர்வு பெற்ற என்.கே.கேபெரியசாமியும் அமைச்சராக உள்ளனர்.

மொடக்குறிச்சி தொகுதி கடந்த தேர்தலில் பெரும் பரபரப்பிற்குள்ளானது. இந்தத் தொகுதியில் 1030 விவசாயிகள் போட்டியிட்டனர். எனவே தேர்தல்தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், விவசாயிகள் சங்கம் தி.மு.க வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை ஆதரித்ததால் அவர் வெற்றி பெற்றார். இந்த முறை விவசாயிகள் சங்கம்இங்கு யாரை ஆதரிக்கிறதோ அவருக்கே வெற்றி வாய்ப்பு ஏற்படும்.

வரும் தேர்தலில், பொதுவான நோக்கில் பார்க்கும்போது, அ.தி.மு.க வின் கோட்டையாக கருதப்படும் ஈரோட்டில் அதிக தொகுதியைக் கைப்பற்றஅ.தி.மு.க விற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு, மொடக்குறிச்சி, காங்கேயம், வெள்ளகோயில், கோபி, சத்தி, பவானி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.கவுக்கு சாதகமான சூழ்நிலை நிலவிவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+