தே.ஜ. கூட்டணியில் நீடிக்கிறது மதிமுக: கண்ணப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவுடன் உறவு முறிந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் மதிமுக தொடர்ந்து நீடிக்கிறது என மத்தியஅமைச்சரும் மதிமுக பொருளாளருமான கண்ணப்பன்.

திமுக - மதிமுக உறவு முறிந்தது என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்ததால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கமதிமுக கட்சியின் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள சென்னை வந்த கண்ணப்பன் விமானநிலையத்தில் நிருபர்களிடம் கேள்விகளுக்கு பதில்அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

1998ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி துவக்கப்பட்டதில் இருந்து மதிமுக அக்கூட்டணியில் உள்ளது.அதனால், அந்த கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறும் கேள்விக்கே இடமில்லை.

மதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சனிக்கிழமை சென்னையில் நடைபெறும் கட்சியின்கூட்டத்திற்குப்பின் அறிவிக்கப்படும் என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக தான் தலைமை தாங்குகிறது. தொகுதி பங்கீடு,ஒதுக்கீடு எல்லாம் திமுகதான் முடிவு செய்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தொடர்ந்து இருக்கிறோம் என கூறும் மதிமுக அக்கூட்டணியின் தமிழகத்தலைமையான திமுகவுடன் மோதி வருவது தமிழக அரசியலை கலகலப்பாக்கி வருகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+