அதிமுக கூட்டணியில் தேவர் பேரவைக்கு 5 தொகுதிகள்
சென்னை:
அதிமுக கூட்டணியில் இணைந்த தேவர் பேரவைக்கு 5 தொகுதிகள் தர ஜெயலலிதா ஒத்து கொண்டுள்ளதாக அதன் தலைவர் சீனிச்சாமி தேவர் கூறியுள்ளார்.
தேவர் பேரவையின் தலைவரான சீனிச்சாமி தேவர் சென்னையில் நிருபர்களிடம் பேசிய போது,
இரண்டரை கோடி மக்களை கொண்ட தேவர் சமுதாயத்தை ஆளும் கட்சி மதிப்பதில்லை. இந்த சமுதாயத்தின் மீது தாக்குதல் நடத்தும் சமூக விரோதசக்திகளுக்கு திமுக அரசு ஆதரவளித்து வருகிறது.
எனவே தான், தேவர் பேரவை அதிமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்தது. கடந்த வாரம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரதுஇல்லத்தில் சந்தித்து அதிமுக கூட்டணியை தேவர் பேரவை ஆதரிப்பதாக தெரிவித்தோம்.
அதனை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, அதிமுக கூட்டணியில் தேவர் பேரவைக்கு 5 தொகுதிகள் தர ஒத்துக்கொண்டார். எனவே, வரும் தேர்தலில்அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தேவர் பேரவை பிரச்சாரம் செய்யும் என தெரிவித்தார்.
திமுக அணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக விலகி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் புதிதாக தேவர் பேரவை இணைந்துள்ளது அதிமுக கூட்டணிக்கு வலுசேர்க்கும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications