த.மா.வா.பே., ரா.லே., இ.தே.லீ., தே.த.கி.கூ.: இதெல்லாம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் எல்லா ஜாதிகளும் ஆளுக்கொரு கட்சியைத் துவக்கிவிட்டன.ஆசியர்கள் சங்கம் கூட தேர்தலில் போட்டியிடுகிறது.

முக்கிய கூட்டணிகளான திமுக, அதிமுகவில் இடம் கிடைக்காத சுமார் 24 கட்சிகள் ஒன்று கூடி மூன்றாவது அணியைஉருவாக்கியுள்ளன. இதில் பெரும்பாலானவை திமுகவிலும் அதிமுகவிலும் இடம் கிடைக்காத ஜாதிக் கட்சிகள்.

இந்தக் கூட்டணிக்குப் பெயர் மக்கள் ஜனநாயக முன்னணி. இதற்குத் தலைவர் மாஜி மந்திரி எஸ்.டி. சோமசுந்தரம். அவருக்கேஅவரது கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் பெயரும், அவை யாருடைய கட்சிகள் என்பதும் நினைவில் இருக்குமா என்பதேசந்தேகம் தான்.

இதில் உள்ள பல ஜாதிக் கட்சிகளும் தங்கள் ஜாதியில் இரண்டரை கோடி மக்களுக்கு குறைவில்லாமல் இருப்பதாகக் கூறிவருகின்றன. இதை கணக்கில் எடுத்துக் கொண்டு கூட்டிப் பார்த்தால், இந்தியா, சீனா ஏன் உலக மக்கள் தொகையை விட அதிகம்எண்ணிக்கை வரும்.

மூன்றாவது அணியில் நிறைந்து வழியும் கட்சிகளும் அவற்றின் சுருக்கமான பெயர்களும் வருமாறு: (நாக்கு சுளுக்கிக்கொண்டால் நாங்கள் பொறுப்பல்ல)

1. ம.ஜ.த- மதசார்பற்ற ஜனதா தளம்

2. அ.இ.மூ.மு.க.- அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

3. த.தே.க.- தமிழ் தேசிய கட்சி

4. இ.தே.லீ- இந்திய தேசிய லீக்

5. த.அ.க.ந.ச.- தமிழ்நாடு அனைத்து கவுண்டர்கள் நலச் சங்கம்

6. அ.பு.பு.இ.- அம்பேக்ரார் புரட்சி புலி இயக்கம்

7. ம.த.- மறுமலர்ச்சி தமிழகம்

8. பி.த.மு.க.- பிற்படுத்தப்பட்டோர் தலித் முன்னேற்றக் கழகம்

9. த.ம.க.- தமிழ் மக்கள் கட்சி

10. கா.அ.அ.தி,ம.க.- காஞ்சி அறிஞர் அண்ண திராவிட மக்கள் கழகம்

11. த.மா.வா.பே.- தமிழ் மாநில வாக்காளர்கள் பேரவை

12. கா.ஆ.க.- காமராஜர் ஆதித்தனார் கழகம்

13. பா.மு.க.- பாரத முன்னேற்றக் கழகம்

14. ம.தே.- மக்கள் தேசம்

15. த.வி.இ.- தலித் விடுதலை இயக்கம்

16. அ.இ.அ.ம.க.- அகில இந்திய அம்பேத்கார் மக்கள் கட்சி

17. த.ம.மு.- தலித் மக்கள் முன்னணி

18. பா.கி.க.- பாரத கிருஸ்தவர் கட்சி

19. தி.மு.மு.க.- திராவிட முஸ்லீம் முன்னேற்றக் கழகம்

20. தே.த.கி.கூ- தேசிய தலித் கிருஸ்துவ கூட்டமைப்பு

21. த.மா.கூ.- தலித் மாணவர் கூட்டமைப்பு

22. ரா.லோ.- ராஷ்ட்ரீய லோக் தள்

23. பு.த.அ.தி.மு.க- புரட்சித் தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

24. வி.இ.- விடுதலை இயக்கம்

இந்தப் பட்டியல் இன்னும் நீளவும் வாய்ப்பிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+