பிராட்மேனுக்கு ஆஸ்திரேலியா கெளரவம்
மெல்போர்ன்(ஆஸ்திரேலியா):
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சர்.டொனால்ட் பிராட்மேனை கெளரவிப்பதற்காக அவரது உருவம் பொறித்தநாணயங்களை ஆஸ்திரேலிய அரசு வெளியிடுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி மறைந்த பிராட்மேனின் சாதனைகளுக்காக ஆஸ்திரேலிய அரசு அவரைகெளரவிக்க முடிவு செய்துள்ளது என ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்டு ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில்தெரிவித்தார்.
20 சென்ட் காயினின் ஒரு பக்கம் ஆஸ்திரேலியாவின் அரசியாக உள்ள ராணி எலிசபெத்தின் உருவம்பொறிக்கப்பட்டு இருக்கும். மற்றொரு பக்கம் பிராட்மேனின் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கும்.
தற்போது உபயோகத்தில் இருக்கும் 20 சென்ட் நாணயங்களில் ஆஸ்திரேலியாவில் காணப்படும் பிளாடிபஸ்விலங்கின் உருவமும், ராணி எலிஸபெத்தின் உருவமும் பொறிக்கப்பட்டு உள்ளது.
புதிதாக வெளியிடவுள்ள ஒரு கோடி நாணயங்களில் பிளாடிபஸ் உருவத்திற்கு பதில் பிராட்மேன் உருவம்இடம்பெற்று இருக்கும். இது தவிர நாணயங்களை சேகரிப்பவர்களுக்காக (நுமிஸ்மேடிக்ஸ் ) மட்டும் 3வகைநாணயங்களை வெளியிடுகிறது ஆஸ்திரேலிய அரசு.












Click it and Unblock the Notifications