மதிமுக இழப்பை திமுக ஈடுகட்டும் .. கருணாநிதி
சென்னை:
மதிமுக இழப்பை ஈடுகட்டும் சக்தி திமுக தொண்டர்களுக்கு உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
சென்னையில், திமுக கூட்டணிக் கட்சிகளின் இறுதி தொகுதிப் பட்டியலை வெளியிட்டு அவர் செய்தியாளர்களிடம்பேசியதாவது:
இந்தப் பட்டியலின்படி எம்.ஜி.ஆர். அதிமுக இடம் பெறவில்லை. பட்டியலில் அவர்கள் இடம் பெறுவார்களாஎன்பதை அவர்களைப் பொறுத்தது. இந்தப் பட்டியலில் மாற்றம் இருக்காது. அப்படியே இருந்தாலும் பெரியமாற்றமாக இருக்காது.
புதிய நீதிக் கட்சி வருவதற்கு வாய்ப்பிருக்கலாம், இல்லாமலும் போகலும். நாங்கள் வரவேற்கத் தயாராகத்தான்இருந்தோம். 2, 3 முறை வருவதாகக் கூறி விட்டு வரவில்லை. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமலும், அதைப்பற்றிக் கவலைப்படாமலும் இருந்தால் அது அவர்களது தவறே தவிர எங்களுடையதல்ல.
மதிமுக தனித்துப் போட்டியிடப் போவது குறித்து நான் ஒன்றும் நினைக்கவில்லை. அவர்கள் பா.ஜ.க.வைஆதரிப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மதிமுக இழப்பை ஈடுகட்டும் தகுதி திமுக தொண்டர்களுக்கு உள்ளது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications