சிறையில் அல்-உம்மா இயக்கத்தினர் உண்ணாவிரதம்
கோவை:
கோவை மத்திய சிறையில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா உள்பட 220 அல் உம்மா இயக்கத்தினர்உண்ணாவிரதத்தை துவக்கினர்.
இளம் சிறை வார்டர்களை மாற்றக் கோரி முதல்வருக்கு பாட்ஷா கடிதம் எழுதியுள்ளார்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கோவை மத்திய சிறையில் 167 பேரும், பிற வழக்குகள் தொடர்பாக சிறையில்உள்ள அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த சிலரும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சிறைக்குள்உண்ணாவிரதத்தை துவங்கினர்.
இந்த நிலையில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனுவில்கூறியுள்ளதாவது:
கடந்த சில ஆண்டுகளாக தமிழக சிறைகளில் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு மூலகாரணமாக 1998ம்ஆண்டு பணிக்கு அமர்த்தப்பட்ட இளம் சிறை வார்டர்களே ஆவர். இவர்களுக்கு சிறையில் பணியாற்றும்அனுபவமும், பயிற்சியும் இல்லை.
பணியில் ஆர்வம் இல்லை. அதிகாரிகளுக்குக் கட்டுப்படாத தன்மை இவர்களிடம் அதிகமாக உள்ளது. இவர்கள்பத்திரிக்கைகளுக்குத் தவறான செய்தி கொடுத்து வருகின்றனர். இவர்களைத் தட்டிக் கேட்கும் உயர் அதிகாரிகளைமிரட்டுகின்றனர். இவர்களது தவறான அணுகுறையால் சிறையில் பதட்டம் நிலவி வருகிறது. சிறைவாசிகளைப்பார்க்க வரும் குடும்பத்தினரை கேலி கிண்டல் செய்கின்றனர்.
எனவே இப்படிப்பட்ட சிறை வார்டர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும். இவர்கள் தொடர்ந்துபணியில் நீடித்தால் சிறை நிர்வாகத்திற்கு கேடாக அமையும். இவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்துவிசாரணை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல்காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்வாதகத் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications