ஊழல்: கஸ்டம்ஸ் உயர் அதிகாரி கைது
டெல்லி:
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறை (கஸ்டம்ஸ் மற்றும் எக்ஸைஸ்) வாரியத்தின் தலைவர் வர்மா, அவரதுமகன் உள்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
டெல்லியில் சிபிஐ செய்தி தொடர்பாளர் கான் நிருபர்களிடம் தெரிவித்த தகவலின் படி,
சென்னையை சேர்ந்த ஏ.கே. என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு கஸ்டம்ஸ் சலுகை அளிப்பதில் ஊழல் நடந்துள்ளதாக கஸ்டம்ஸ் அதிகாரிகள் மீது புகார்தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி விசாரித்த சிபிஐ, பல்வேறு கஸ்டம்ஸ் அதிகாரிகளின் வீடுகளை சோதனையிட்டது. மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறை வாரியத்தின்தலைவரான வர்மாவின் வீட்டிலும் சிபிஐ ரெய்டு நடைபெற்றது.
இச்சோதனையின் போது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சொத்துகளில் வர்மா முதலீடு செய்து இருந்த ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது.
இதனையடுத்து இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வர்மா, அவரது மகன் சித்தார்த் வர்மா , மற்றும் வர்மாவின் நண்பர் பாவ்னா சர்மாஆகியோரை டெல்லிசிபிஐ ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தது.
தரகர் மூலம் வர்மாவை அணுகிய சென்னை நிறுவனத்தின் பார்ட்னர் ஸ்ரீவாணனையும் சென்னையில் சிபிஐ கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் திங்களன்றுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். இதில் சம்பந்தப்பட்ட தரகர் தலைமறைவாகிவிட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications