தமிழ்க்குடிமகன் வீடு மீது கடும் தாக்குதல்- ஆசிட் வீச்சு: ஸ்டாலின் வாழ்க கோஷம் போட்டு தப்பி ஓடியது கும்பல்
சென்னை:
திமுகவில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுக வில் சேர்ந்த தமிழ்க்குடிமகனின் வீட்டின் மீதுஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியது.
தப்பித்துச் செல்ல முயன்ற அமைச்சரின் உதவியாளர் மீது ஆசிட் வீசப்பட்டது.
சென்னையில் அமைச்சர்கள் வசிக்கும் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் வசித்து வருகிறார் தமிழ்க்குடிமகன்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழ்க்குடிமகனும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் வெளியில் சென்றிருந்தனர்.தமிழ்க்குடிமகனின் உதவியாளர் ரவி மற்றும் சிலரும் அறையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது 10 க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று தமிழ்க்குடிமகன் வீட்டுக்கு வந்தது. ஸ்டாலின் வாழ்க, கலைஞர்வாழ்க என்று கூச்சலிட்டுக் கொண்டே அக்கும்பல் கண்ணாடி ஜன்னல்களை உருட்டுக் கட்டைகளால் அடித்துநொறுக்கியது.
இதையடுத்து, அமைச்சரின் உதவியாளர் ரவி, அக்கும்பலிடமிருந்து தப்பிப்பதற்காக மேல்மாடிக்கு ஓடினார்.அக்கும்பல் ரவியைக் குறி வைத்து ஆசிட் பாட்டிலை வீசியது. ஆனால் ஆசிட் அவர் மீது படவில்லை.
அங்கு அமர்ந்திருந்த தமிழ்க்குடிமகனின் ஆதரவாளர்கள், வன்முறைக் கும்பலிடமிருந்து தப்பிக்கும் வகையில்வீட்டின் பின்பக்கம் வழியே தப்பித்து ஓடினர். வன்முறைக் கும்பலும் வீட்டின் பின்பக்கம் வழியே தான் தாக்குதல்நடத்தியது.
கதவு, ஜன்னல்கள் உடைக்கப்படும் சத்தம் கேட்டு வீட்டில் முன்வாசலில் பாதுகாப்புக்காக நின்றிருந்த துப்பாக்கிஏந்திய போலீஸ்காரர் ஒருவர் வந்தார்.
அவரைப் பார்த்ததும் அக்கும்பல் தப்பியோடி விட்டது. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனரிடமும், போலீஸ்டி.ஜி.பி.யிடமும் தமிழ்க்குடிமகன் புகார் கொடுத்தார்.
தாக்குதல் சம்பவம் குறித்து தமிழ்க்குடிமகன் கூறுகையில், மிகவும் வருந்தத்தக்க செயல் என்று மட்டும் கூறினார்.


Click it and Unblock the Notifications
