வைகோ பிரச்சனை: அத்வானியுடன் பேசமாட்டார் கருணாநிதி
சென்னை:
மதிமுகவுடனான பிரிவு, தொகுதி பிரச்சனை உள்ளிட்ட எந்த விதமான தேர்தல்பிரச்சனையுயம் அத்வானியிடம் எடுத்துத் செல்லப் போவதில்லை என தமிழகமுதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம..தி.மு.கவுக்கும், தி.மு.கவுக்கும் இடையேதொகுதிகள் அடையாளம் காண்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து தமிழக முதல்வரும். தி.மு.க. தலைவருமான கருணாநிதி ம.தி.மு.க.தனித்து போட்டியிட விரும்பினால் கூட்டணியிலிருந்து விலகலாம் என அறிவித்தார்.பின்னர் ம.தி.மு.கவுடனான உறவு முறிந்து விட்டது என அறிவித்தார்.
ஆனாலும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தமிழத்தில் தே.ஜ.கூட்டணியில்இல்லாவிட்டாலும் மத்தியில் தே.ஜ.கூட்டணியை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
பா.ஜ.கவின் தேர்தல் பிராசாரம் திருச்சியில் தொடங்கவிருக்கிறது அதில்பங்கேற்கவிருக்கும் தே.ஜ.கூட்டணயின் நிறுவனரும், முன்னாள் பாதுகாப்பு துறைஅமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் தி.மு.க. - ம.தி.மு.க. இடையே சமரசம் செய்துவைக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
இது குறித்தும், ம.தி.மு.க. மத்தியில் தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாககூறியிருப்பது குறித்தும் நிருபர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினர்
இது தொடர்பாக தி.மு.க.தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் அவர் கூறுகையில், திருச்சியில் பா.ஜ.க, தேர்தல் பிரசாரத்துக்குசெல்லும் வழியில் சென்னைக்கு வந்துள்ளார். தேர்தல் குறித்த பிரச்சனைகைளஅத்வானியிடம் எடுத்துச் செல்ல விரும்பவில்லை.
நான் ம.தி.மு.க. மத்தியில் இருக்கும் தே.ஜ.கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது குறித்துமுன்னரே மகிழ்ச்சி தெரிவித்திருந்தேன்.
இந்த மாதம் 9ம் தேதி தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை திருச்சியிலிருந்து தொடங்கும்.திமுக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம்தேதி வெளியிடப்படும்.
கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அது விரைவில்வெளியிடப்படும்.
புதிய நீதிக் கட்சி பேச்சு வார்த்தைக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. தயாராக இருக்கிறது.
எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு 3 தொகுதிகள் போதாது,மேலும் தொகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளார். அவ்வாறு கேட்பது அவர் உரிமை.
ஆனால் தி.மு.க. அதிக தொகுதிகளை கொடுக்க இயலாத நிலைமையில் இருக்கிறதுஎன்பதுதான் உண்மை என்றார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications