மீண்டும் கயானா நாட்டு அதிபராகிறார் இந்தியர்
வாஷிங்டன்:
தென் அமெரிக்கா நாடான கயானாவின் அதிபராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பரத் ஜாக்டியோ இரண்டாவதுமுறையாக பதவியேற்றுக் கொண்டார்.
தலைநகர் கேப்டவுனில் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட அவர், மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் வன்முறை இல்லாத சமுதாயம்உருவாக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அனைத்து மக்களும் தேசிய ஒருமைபாட்டுடன் வாழவேண்டும். கயானாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொள்வேன் என்று கூறினார்.
இவர் 1964 ம் ஆண்டு பிறந்தார். கயானா அதிபராக இருந்த ஜனட் ஜகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பரத் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கயானா அதிபராகப்பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ரஷ்யாவில் பயிற்சி பெற்ற பொருளாதார வல்லுநர்.
பரத் இந்திய, கயான மக்கள் முன்னேற்ற இடதுசாரிக் கட்சியின் தலைவர். இவர் கயானாவின் 7 வது அதிபர்ஆவார்.
கடந்த மார்ச் 19 ம் தேதி கயானாவில் பொதுத்தேர்தல் நடந்தது. தேர்தலில் பரத் அமோக வெற்றி பெற்றார்.இதையடுத்து, இவரது வெற்றியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
இவரை எதிர்த்து தேர்தலில் நின்ற முன்னாள் அதிபர் டேஸ்மன்ட் ஹோய்டே 42 சதவீத வாக்குகளைப் பெற்றார்.பரத் 53 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கயானாவில் வாழும் இந்தியர்கள் அனைவரும் பரத்தின் ஆதரவாளர்கள். அவர்களின் வாக்குகள் முழுமையாகபரத்துக்கே சென்றது எனலாம். ஆனால் அதே நேரம் கயானாவில் வாழும் கருப்பு இனத்தவர் ஹோய்டேவுக்கேதங்கள் வாக்குகளை அளித்தனர்.
கயானாவில் உள்ள 7 லட்சம் மக்கள்தொகையில் 39 சதவீதம் பேர் ஆப்ரிக்காவிலிருந்து வந்த அடிமைகள்.இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் 47 சதவீதம் பேர்.
அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட பரத் முதலில் நிதியமைச்சராகப் பதவி வகித்து வந்தார். சர்வதேச அளவில்நிதித்துறையில் பல பதவிகளை வகித்து வந்தவர். சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) கவர்னராகவும், தொழில்மற்றும் வர்த்தக சபை தேசிய வங்கியின் இயக்குநராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications