வார்டன்களை மாற்றக் கோரி அல் உம்மாவினர் உண்ணாவிரதம்
கோவை:
இளம் சிறை வார்டன்களை மாற்றக் கோரி திங்கள்கிழமை முதல் அல் உம்மா இயக்கத்தினர் கோவை சிறையில்உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
கோவை மத்திய சிறையில் மிகப் பெரும் பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. அதிகாரிகளுக்கும் சிறைவார்டன்களுக்கும், சிறைக்காவலர்களுக்கும் இடையே நீடித்து வரும் இந்த பனிப்போர், இப்போது கைதிகளின்உண்ணாவிரதத்தில் நிறுத்தியுள்ளது.
சிறைக்குள் இருக்கும் அல் உம்மாவினருக்கு உதவ மறுத்து வரும் போலீஸ்காரர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும்இடையே இறுக்கமான சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மீது போலீசாரும், போலீசார் மீது உயர்அதிகாரிகளும் மாறி மாறிப் புகார் கூறினர்.
இந்த நிலையில் சிறைக்குள் இருந்து வரும் அல் உம்மா கைதிகளுக்கு பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதுகண்டுபிடிக்கப்பட்டது. இந்த பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பல காலமாக அல் உம்மா கைதிகளுக்கு இறைச்சி பரிமாற்ற முதல், உள்ளே அவர்களே சொந்தமாக சமையல்செய்து சாப்பிடும் அளவுக்கு "தாரளமயமாக்கப் பட்டிருந்தது. சிறையில் நடந்த அதிரடி சோதனையில், ஸ்டவ்உள்பட காய்கறிகள் எல்லாம் ஒரு முறை கைப்பற்றப்பட்டன.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 167 அல் உம்மா இயக்கத்தினர், அவர்களுக்கு உதவியவர்கள், டி.ஐ.ஜிஅலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் என சிறையில் 245 தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்காகசிறையில் இருந்து வருகின்றனர்.
இவர்களிடம், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்ற இளம் வார்டன்கள் இவர்களிடம் சற்றுகெடுபிடியாகவே நடந்து கொண்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அல் உம்மாவினர் இப்போது போராட்டத்தை துவக்கியுள்ளனர். திங்கள்கிழமை முதல்பாட்ஷாவின் தலைமையில் சிறைக்குள் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இளம் சிறைவார்டன்களின் கெடுபிடியை இவர்கள் கண்டித்து உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications