தமிழ்குடிமகனால் பிரச்சனையில் சிக்கிய கண்ணப்பன்
சென்னை:
மக்கள் தமிழ் தேசத்தில் அதிருப்தி தலை தூக்கியுள்ளது. கட்சித் தலைவர் எஸ். கண்ணப்பனுக்கு எதிராக துணைத்தலைவர் குரல் கொடுத்துள்ளார்.
திமுகவில் அமைச்சராக இருந்த யாதவரான தமிழ்குடிமகனின் தொகுதியான இளையாங்குடியை திமுகவிடமிருந்துகேட்டுப் பெற்ற கண்ணப்பனுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
யாதவ சமூகத்தைச் சேர்ந்த அமைச்சருக்கே யாதவர் கட்சி நடத்தும் கண்ணப்பன் குழி தோண்டுவதா என கேள்விஎழுந்துள்ளது.
சமீபத்தில் பிறந்த கட்சிதான் மக்கள் தமிழ் தேசம் கட்சி. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் முக்கிய அமைச்சராகஇருந்த எஸ்.கண்ணப்பன்தான் இக்கட்சியின் தலைவர். திமுக கூட்டணியில் சேர்ந்து இக்கட்சி தற்போது தேர்தலைசந்திக்கவுள்ளது.
மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு 6 தொகுதிகளை கொடுத்துள்ளார் கருணாநிதி. இந் நிலையில், இக்கட்சியில் அதிருப்திதலை தூக்கியுள்ளது. கட்சித் துணைத் தலைவர் ராமச்சந்திர மருதுபாண்டியர், கண்ணப்பனுக்கு எதிராக அறிக்கைவிடுத்துள்ளார்.
ராமச்சந்திர மருதுபாண்டியர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், யாதவர் சமூகத்தவரின் ஆதரவில்கட்சி துவக்கி அவர்களின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் கண்ணப்பன், சில காலமாக யாதவ மக்களைபுறக்கணிக்கும் விதமாக செயல்படுகிறார்.
ஏறிவந்த ஏணியை எட்டி உத்ைது விட்டு அவர் செயல்படுகிறார். இளையாங்குடியில், யாதவ இனத்தைச் சேர்ந்ததமிழ்க்குடிமகனுக்கு சீட் கிடைக்காமல் செய்து சதி செய்துவிட்டார் கண்ணப்பன்.
கண்ணப்பனின் இந்த செயலைக் கண்டித்து இன்னும் ஒரு வாரத்தில் கட்சியின் போட்டி பொதுக்குழுவைக் கூட்டிஅடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றுள்ளார் மருதுபாண்டியர்.
இதுவரை திமுக எதிர்ப்பு கட்சிகளில் தான் பிளவுகள் காணப்பட்டன. முதல் முறையாக திமுக ஆதரவுக் கட்சிஒன்றில் அதிருப்தி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications