நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க அத்வானி அறிவுரை
திருச்சி:
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நேர்மை, திறமை மற்றும் உறுதியோடு உள்ள நல்ல வேட்பாளர்களைதமிழக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ், பா.ஜ.க. தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்ட திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அத்வானி,
கடந்த 98ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் உயிர்பிழைத்து வந்து திருச்சியில் தேர்தல் பிரச்சாரம்செய்தேன். அத்தேர்தலில் திருச்சி மக்கள் தேர்ந்தெடுத்த ரங்கராஜன் குமாரமங்கலம் தற்போது இல்லை.
திறமையான, துடிப்பான அந்த தலைவரின் இடத்தை நிரப்ப அவரை போன்ற ஒரு பிரதிநிதியை வரும் தேர்தலில்பாரதீய ஜனதாவிற்கு மக்கள் தேர்ந்து எடுத்து தர வேண்டும்.
அனைவரையும் கவர்ந்த பட்ஜெட்:
மத்தியில் ஆளும் பா.ஜ.க. தாக்கல் செய்த பட்ஜெட் அனைவரும் வரவேற்கும் வகையில் அமைந்து இருந்தது.அதனை பொறுக்காத எதிர்க்கட்சிகள், தெஹல்கா நிறுவனம் வெளியிட்ட வீடியோ காட்சிகளை காரணம் காட்டிநாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்கின்றனர்.
ஊழல் நடந்து உள்ளதாக அவர்கள் கூறிய குற்றச்சாட்டு குறித்து நீதி விசாரணை நடத்தி நாடாளுமன்றத்தில்அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவித்தோம்.
ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சிகள் 15 நாட்களாக நாடாளுமன்றத்தை நடத்த விடாமல்செய்தனர். கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருக்கிறேன்.
ஆனால், தற்போது எதிர்க்கட்சிகள் நடத்தியது போல் மீன்மார்க்கெட் குழப்பங்களை ஒரு போது நான் பார்த்ததுஇல்லை. இந்திரா காந்தி ஆட்சியில் ஊழல் நடந்த போது இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ளஒன்று என பதிலளித்தார் இந்திரா காந்தி.
ராஜீவ் காந்தி ஆட்சியிலும் ஊழல் நடந்தது. அதனால், பதவியை இழந்தார் அவர். ஊழலற்ற ஆட்சியைதருவதற்காக பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் படைத்த லோக்பால் அமைப்பை பா.ஜ.க அரசு உருவாக்கியது.
அத்தகைய ஒரு ஆட்சியில் தெஹல்கா நிறுவனம் வெளியிட்ட வீடியோ காட்சிகளில் எந்த வித ஊழல்குற்றச்சாட்டும் இல்லை. எனவே, மந்திரி பதவியை விட்டு விலக வேண்டாம் என நான்தான் ஜார்ஜ்பெர்னான்டசிடம் கூறினேன்.
எனினும், அவர் பதவி விலக விரும்பியதை பிரதமரும் ஏற்றுக் கொண்டார். கார்கில் போரின் போதுபோர்முனைக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்தியவர் பெர்னான்டஸ்.
தெஹல்கா நிறுவனம் வெளிப்படுத்திய தகவல்கள் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டதுஇல்லை. இருந்தும், இது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததோடு சம்பந்தப்பட்ட துறைஅமைச்சரும் பதவி விலகி உள்ளதன் மூலம் இந்த அரசு வித்தியாசமான அரசு என்பது தெரியவரும்.
தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் நேர்மையான, திறமையான வேட்பாளர்களை மக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும்.மக்கள் விரும்பும் நேர்மையான, திறமையான ஆட்சியை திமுக கூட்டணி நிச்சயம் தரும் என்றார்.
பா.ஜ.கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டமான இதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கட்சி தலைவர்களான மதிமுகபொதுச்செயலாளர் வைகோ, திமுக அமைச்சர் ஆலடி அருணா, எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச்செயலாளர்திருநாவுக்கரசு, தமிழர் பூமி கட்சி தலைவர் கு.ப.கிருஷ்ணன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்துமற்றும் பா.ஜ.கட்சியின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications