விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் பிளவு?
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் அமைப்பை திமுகவுக்கு விற்று விட்டார் திருமாவளவன் என்று விடுதலை சிறுத்தைகள்அமைப்பு உறுப்பினர் சீமா தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் விரைவில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் பிளவு ஏற்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து சீமா தங்கமணி சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தலித்துக்களுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சி. ஆனால் இதில் உள்ள பறையர் இனமக்களுக்குப் போதுமான பாதுகாப்போ, சலுகைகளோ இல்லை.
திமுக, தலித் இன மக்களுக்கு எதிரான கட்சியாகும். இது திருமாவளவனுக்கே தெரியும். இருப்பினும் அவர் எப்படிதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் இருக்கும் பறையர் விடுதலை பேரவை வரும் தேர்தலில் திமுகவுக்கோ,அதிமுகவுக்கோ ஆதரவளிக்க மாட்டோம். இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம்.
தலித் இன மக்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையே மோதல் உருவாகும் வகையில் பலமுறை வன்முறையைத்தூண்டி விட்டுள்ளார் திருமாவளவன்.
திருமாவளவன் மேல் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எங்களது பறையர் விடுதலை பேரவையினர்வரும் 8 ம் தேதி கடலூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தவுள்ளோம். இதில் பல அம்பேத்கார் அமைப்பினர் கலந்துகொள்வார்கள்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி திருமாவளவன் ஜெர்மனியில் உள்ள பல அரசு சாராநிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற்று வருகிறார்.
ஆயிரக்கணக்கான பறையர் இன இளைஞர்கள் தங்கள் வேலை மற்றும் கல்வியைத் தூக்கியெறிந்து விட்டுவிடுதலை சிறுத்தைகள் அமைப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் திருமாவளவனோ சுயநலத்துடன் நடந்து கொள்கிறார்என்றார் சீமா தங்கமணி.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications