வைகோவுடன் மேடையேற மாட்டோம்: பாஜக அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற மதிமுகவுடன் சேர்ந்து தேர்தல்பிரசாரம் மேற்கொள்வது சாத்தியமில்லாதது என்று அகில இந்திய பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் மே 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராகஉள்ள எல்லா கட்சிகளையும் எதிர்த்து பாஜக பிரசாரம் மேற்கொள்ளும்.
சட்டசபைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளைத் தவிர பிற தொகுதிகளில் மதிமுக போட்டியிடும் என்றுகட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஆனால் பாஜக, திமுக கூட்டணிக்கு எதிராக உள்ள கட்சிகளுக்கு ஆதரவாகப் ஒருபோதும் பிரசாரம் செய்யாது.
திமுக, மதிமுக கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனையில் பாஜக தலையிடாது. அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளபிரச்சனையை அவர்களேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் சேர்ந்து போட்டியிடத்தீர்மானித்திருக்கிறார்கள். அதனால் மேற்கு வங்காளத்தில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்றார்ஜனா.கிருஷ்ணமூர்த்தி.
தொகுதிகளைப் பங்கீடு செய்து கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதிமுக, திமுக கூட்டணியிலிருந்துவெளியேற்றப்பட்டது. இதையடுத்து வைகோ கூறுகையில், திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும்நாங்கள் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications