தமிழ்க்குடிமகன் அதிமுகவுக்கு தாவியது சரியா?
சென்னை:
மீண்டும் எம்.எல்.ஏ. சீட் கொடுக்கப்படாததால் கட்சி மாறியுள்ளார் தமிழக அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன்.
சீட் கிடைக்காமல் கட்சி மாறுவது, கோபித்துக் கொண்டு பதவி விலகுவது அரசியல்வாதிகளுக்குப் புதிதல்ல.ஆனால் தமிழ்க்குடிமகன் விஷயத்தில் இது புதிய கோணத்தில் பார்க்கப்பட வேண்டிய விவகாரமாகியுள்ளது.
மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்தவர்தான் சாத்தையா என்ற இயற் பெயர்கொண்டவர் தமிழ்க்குடிமகன்.
போனில் தமிழ்க்குடிமகனை தொடர்பு கொள்பவர்கள், இம்முனையில் தமிழ்க்குடிமகன், அம்முனையில் எவரோஎன்ற இனிய தமிழை கேட்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
நல்ல தமிழாசிரியரான தமிழ்க்குடிமகன் 1988-ம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டார். அப்போது திமுக நீண்டகாலத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தது. சுமார் 2 ஆண்டு காலம்மட்டுமே ஆட்சிப் பொறுப்பில்
இருந்த திமுக காலத்தில் சபாநாயகராகப் பதவி வகித்தார் தமிழ்க்குடிமகன். ஆனால் இதில் தமிழ்க்குடிமகனுக்குவிருப்பம் இல்லை. அவர் எதிர்பார்த்தது அமைச்சர் பதவியைத்தான்.
2 ஆண்டு காலமே பதவியில் இருந்தாலும் நல்ல சபாநாயகர் என்று பெயர் எடுத்தார். உவமைகள், உவமேயங்கள்,நகைச்சுவை ததும்பும் பேச்சுக்கள் என சபை நடவடிக்கைகளுக்கு பொலிவு சேர்த்தார் தமிழ்க்குடிமகன்.
திமுக ஆட்சி போய், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரமான அளவில் அரசியலில் அவர் ஈடுபடவில்லை. இந்தநிலையில், 96-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இம்முறை அவர் சபாநாயகர் பதவி வகிக்கவில்லை. மாறாகஅமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த முறை கிடைக்காமல் போன அமைச்சர் பதவி இப்போது கிடைத்ததால்மகிழ்ச்சி அடைந்தார் தமிழ்க்குடிமகன்.
இந்து சமய அறநிலையத்துறை அவருக்குக் கிடைத்தது. அத்தோடு புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ் ஆட்சி மொழிமற்றும் பண்பாட்டுத் துறை என்ற துறையும் அவர் வசம் கொடுக்கப்பட்டது. அவருக்கேற்ற
துறை என அனைவரும் கூறினர். தமிழ்க்குடிமகனும் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சரியாகவேநிறைவேற்றினார்.
அரசு அலுவலகங்களில் தமிழ்ப் பயன்பாட்டை அதிகப்படுத்தினார். தமிழ் இன்டர்நெட் மாநாடு அவரதுஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் நடந்தது. சுருக்கமாக சொன்னால் அவரது தமிழார்வத்திற்குத் தீனி போடுவதுபோல அருமையான துறை அவருக்குக் கிடைத்தது.
5 ஆண்டு கால திமுக ஆட்சிக்காலம் முடிந்து அடுத்த தேர்தலை தமிழகம் சந்திக்கவுள்ள இப்போதையசூழ்நிலையில் தமிழ்க்குடிமகனுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சில நிகழ்வுகள் திமுகவுக்குள் நடக்கத் தொடங்கின.
அதிர்ச்சி நம்பர் 1: மக்கள் தமிழ் தேசம் என்ற பெயல் யாதவர்கள் என்றும் கோனார்கள் என்றும் அழைக்கப்படும்சமூகத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட கட்சியை முன்னாள்
அமைச்சர் கண்ணப்பன் கட்சி தொடங்கினார். தென் தமிழ்நாட்டில் நல்ல எண்ணிக்கையில் உள்ள கோனார்சமூகத்தைச் சேர்ந்த தமிழ்க்குடிமகனுக்கு, இது பீதியைத் தந்தது.
அதிர்ச்சி நம்பர் 2: தமிழ்க்குடிமகன் எதிர்பார்த்தது போலவே, கண்ணப்பன், திமுகவுடன் கூட்டணி அமைத்தார். இதுஅவருக்குப் பிடிக்கவில்லை.
அதிர்ச்சி நம்பர் 3: தமிழ்க்குடிமகன் எதிர்பார்க்காத வகையில், கண்ணப்பனுக்கு திமுகவில் முக்கியத்துவம்அதிரிகத்தது. ஸ்டாலினின் மிக நெருங்கிய நபராக குறுகிய காலத்தில் மாறினார் தமிழ்க்குடிமகன்.
அதிர்ச்சி நம்பர் 4: சட்டசபைத் தேர்தலில் மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு 6 இடங்களை ஒதுக்கினார் கருணாநிதி.இதில் ஒரு தொகுதி இளையாங்குடி என்று கூறப்பட்டது. தமிழ்க்குடிமகனுக்கு மிகப் பெய
அதிர்ச்சியே இதுதான். காரணம், தமிழ்க்குடிமகன் தற்போது எம்.எல்.ஏவாக இருக்கும் தொகுதி இளையாங்குடி.
அதிர்ச்சி நம்பர் 5: தனது தொகுதியான இளையாங்குடியை கண்ணப்பன் கட்சிக்குக் கொடுக்கக் கூடாது என்று
கருணாநிதிக்கு அடுத்த கட்ட தலைவர்களிடம் பகிரங்கமாகவே எதிர்ப்பு தெவித்தார் தமிழ்க்குடிமகன். வேறு பதவிதரப்படும் என்று சமாதானம் கூறப்பட்டது. ஆனால் இளையாங்குடி கை விட்டுப் போனதை
அவமானமாக உணர்ந்தார் தமிழ்க்குடிமகன். இருந்தாலும், தொகுதிப் பங்கீடு முடியாததால், அமைதி காத்தார்.
அதிர்ச்சி நம்பர் 6: திமுக கூட்டணியின் தொகுதிப் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டபோது திமுகபோட்டியிடும் தொகுதிகளில் இளையாங்குடி இடம் பெறவில்லை. மாறாக, கண்ணப்பன் கட்சிக்கு அதுஒதுக்கப்பட்டிருந்தது. தன்னை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று முடிவு செய்தார் தமிழ்க்குடிமகன்.
இரவோடு இரவாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்தார். அடுத்த நாள் காலையில்ஜெயலலிதாவைப்பார்த்தார். பட்டுச் சேலை கொடுத்து அதிமுகவில் ஐக்கியமானார். தமிழ்க்குடிமகன் கட்சி மாறியதுசுத்தமான பச்சோந்தித்தனம் என்கிறார்கள் திமுகவினர்.
ஒரு அரசியல்வாதி தனது முடிவை தீர்மானிக்க முழு உரிமை உள்ளது. ஆனால் தமிழ்க்குடிமகன் சிறிது நிதானித்துமுடிவெடுத்திருக்கலாம் என்பதே திமுக தரப்பு வாதம்.
தமிழ்க்குடிமகன் கட்சி மாறியதால் வருத்தம் இல்லை. ஆனால் மரியாதைக்குய ஒரு தலைவன் கீழ், கட்சியின் கீழ்அவர் சேர்ந்திருக்கலாம். போயும், போயும் அதிமுகவில் சேர்ந்து விட்டாரே என்றுதான் எங்கள் வருத்தம்என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
பேராசிரியராக இருந்த காலத்தில் தமிழ்க்குடிமகனுக்கு ஒரு நல்ல ஆசிரியர் என்ற பெயர்தான் கிடைத்தது. நல்லசம்பளமும் கூட அவருக்குக் கிடையாது. ஆனால் சபாநாயகர், அமைச்சர் என அவரே நினைத்துப் பார்க்க முடியாதஅளவுக்கு கெளவரம், அந்தஸ்தும், வசதியும் செய்து கொடுத்தார் கலைஞர். அவருடைய முதுகில் குத்தியுள்ளார்இப்போது தமிழ்க்குடிமகன் என்கிறார்கள் அவர்கள்.
மத்திய அமைச்சராக இருந்த தலித் எழில்மலை அதிமுகவில் சேர்ந்தார். இப்போது அவர் எங்கே இருக்கிறார்என்றே தெரியவில்லை. மேலும் அவர் விலகிய பாட்டாளி மக்கள் கட்சி, ஜெயலலிதாவின்
பாசத்துக்குரிய கட்சியாக மாறியுள்ளது. நாளைக்கே, பா.ம.க. தலைவர் ராமதாஸ், தலித் எழில்மலைக்கு சீட்கொடுக்காதீர்கள், அவரை கண்டு கொள்ளாதீர்கள் என்றால் தலித் எழில்மலை கதி என்ன?.
தலித் எழில்மலை கதிதான் தமிழ்க்குடிமகனுக்கு நேரும் என்கிறார்கள் திமுகவினர். மேலும், காமுளித்து போலஅறிக்கை எழுதி கொடுப்பதற்கும், ஜெயலலிதாவின் பேச்சுக்களில் புரூப் பார்ப்பதற்குகே
தமிழ்க்குடிமகனை அதிமுக பயன்படுத்தும் என்றும் நக்கலாக கூறுகிறார்கள் திமுக தரப்பினர்.
இப்போது, தமிழ்க்குடிமகனுக்கு இளையாங்குடி தொகுதி தரப்படும் என்று அதிக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.தனக்கு விசுவாசமாக இருந்து, கட்சியை விட்டு வெளியேறிய கண்ணப்பனைப் பழி வாங்க அவரது
சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவரே, அதுவும் தற்போதைய தொகுதி எம்.எல்.ஏ.வே தன்னிடம் ஐக்கியமாகியுள்ளதைசரியாகப் பயன்படுத்திக் கொள்வார் அமைச்சர் என்கிறார்கள் அதிமுகவினர்.
கட்சி மாறியதன் மூலம் பலருக்கு உயர்வு கிடைத்திருக்கிறது. ஆனால் தமிழ்க்குடிமகனுக்கு வசவுதான்கிடைத்திருக்கிறது. திமுக தரப்பில் மட்டுமில்லாது, அதிமுக தரப்பில்ம் அதிருப்தி கிளம்பியுள்ளது.
இளையாங்குடி தொகுதியில் கண்ணப்பனுக்கு எதிராக தமிழ்க்குடிமகனை நிறுத்த இளையாங்குடி பகுதிஅதிமுகவினர் எதிர்ப்பு தெவித்துள்ளனர். அப்படி நிறுத்தப்பட்டால், தமிழ்க்குடிமகனை தோற்கடிப்போம் எனவும்அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
எப்படியோ, தொகுதி தரவில்லை என்பதற்காக, சம்பந்தமே இல்லாத ஒரு கட்சியில் போய்ச் சேர்ந்து விட்டாரேஎன்றுதான் திமுக தரப்பில் தமிழ்க்குடிமகனை பரிதாபத்தோடு பார்க்கிறார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications