மதிமுக இடங்கள் எங்களுக்கு வேண்டும்: திருநாவுக்கரசு
திருச்சி:
திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 21 சீட்டுக்களிலிருந்து எங்களுக்கு சிலசீட்டுக்களைக் ஒதுக்குங்கள் என்று எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு செவ்வாய்க்கிழமைமுதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மதிமுக, திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து செல்வதற்கு முன்பு அவர்களுக்கு 21 சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.மதிமுக பிரிந்து சென்று விட்டதால் அந்த 21 இடங்களிலிருந்து சில தொகுதிகளை எங்களுக்குக் கூடுதலாக ஒதுக்கவேண்டும்.
ஒரு வேளை மதிமுகவினர் சமரசமடைந்து திமுக கூட்டணிக்குத் திரும்பி வந்தால் அவர்களிடம் எங்களுக்குக்கூடுதலாக ஒதுக்கப்படும் தொகுதிகளைத் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற வேணடும் என்பதும், கருணாநிதியே அடுத்த முதல்வராக ஆகவேண்டும் என்பதும்தான் எம்ஜிஆர் அதிமுக வின் குறிக்கோளாகும். திமுக கூட்டணியின் வெற்றிக்காக நாங்கள்பாடுபடத் தயாராக இருக்கிறோம்.
மதிமுக மீண்டும் திமுக கூட்டணியில் இணையுமா என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது. அது கருணாநிதிமற்றும் வைகோ ஆகியோர்களுக்கிடையே உள்ள பிரச்சனை. அதுபற்றி அவர்கள்தான் பேசி முடிவு எடுக்கவேண்டும்.
இந்த நேரத்தில் தமிழகத்தில் திமுக கூட்டணியிலிருந்து பிரிந்தாலும், மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாங்கள் தொடருவோம் என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதையும் நினைவுகூர வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்கள், தங்களிடமுள்ள வேறு அடையாளங்களைக் காட்டிஓட்டுப் போடலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன் என்றார் திருநாவுக்கரசு.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications