கிரிக்கெட்: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா
விசாகப்பட்டினம்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற4வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையே கோவாவில் நடைபெறும் 5வதுபோட்டி முக்கியமானதாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் மாத்யூ ஹேடன்(111 ரன்கள்), மற்றும் ரிக்கி பாண்டிங்(101 ரன்கள்) ஜோடி இணைந்து2வது விக்கெட்டிற்கு 219 ரன்கள் எடுத்தது.
அதன் பின் வந்த ஸ்டீவ் வாஹ் (35 ரன்கள்) , மற்றும் மைக்கேல் பெவன்(43 ரன்கள்) ஆகியோரின் ஆட்டத்தால்அந்த அணியின் ஸ்கோர் 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் என உயர்ந்தது.
விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறும் 5வது சர்வதேச போட்டியாகும் இது. இம்மைதானத்தில் பந்து வீச்சுஎடுபடாததால் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிற்கு எதிராக அதிகபட்ச ரன்களை குவித்தது.
இப்போட்டியில் மாத்யூ ஹேடன் ஒரு நாள் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை எடுத்ததோடு இன்றையஆட்டத்தின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல் இந்திய டூர் முழுவதும் சரியாக விளையாடாதரிக்கி பாண்டிங்கும் இன்றைய ஆட்டத்தில் சதமடித்து, தான் இன்னும் பார்மில் இருப்பதை நிரூபித்தார்.
இத்தொடர் முழுவதும் சரியாக விளையாடாத கங்குலி இப்போட்டியில் மீண்டும் துவக்க ஆட்டக்காரராககளமிறங்கி விரைவில் அவுட்டாகி விட்டார்.
இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படி ஆடிய டெண்டுல்கரும் (62 ரன்கள்) விரைவில் அவுட்டாகிவிடஇந்திய அணியை காப்பாற்ற முயற்சித்தவர்கள் ஜாகிர்கானும்(29 ரன்கள்) ஹர்பஜன் சிங்கும்(46 ரன்கள்) மட்டுமே.
45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 245 ரன்கள் மட்டும் எடுத்து 93 ரன்கள்வித்தியாசத்தில் தோற்றது.
இன்றைய போட்டியில் புதிதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் பிராக்மன் மற்றும் கிளென்மெக்ராத் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பந்து வீச்சில் மார்க் வாஹ் இடத்தை நிரப்பிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஷேன் வார்னேவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய வென்றதை அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகளில் வென்று சமநிலையில்உள்ளன. கோவாவில் 5ம் தேதி நடைபெறும் இறுதிபோட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications