ம.தி.மு.க. வெளியேறியதால் பாதிப்பில்லை: பா.ஜ.க.
சென்னை:
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதால் பாதிப்பு இல்லை. அந்த கூட்டணி பெரிய வெற்றியைப் பெறும் என பா.ஜ.க. தலைவர்ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி செவ்வாய்க்கிழமை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அதன் பின் நிருபர்களிடம் பேசியகிருஷ்ணமூர்த்தி,
கடந்த 8 ஆண்டுகளாக டெல்லியில் இருந்ததால் திமுக தலைவரை நேரில் சந்திக்க முடியவில்லை.
தற்போது பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் என்ற முறையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியை சந்தித்து பேசினேன். இது ஒருமரியாதை நிமித்தமான சந்திப்பு.
தேசிய ஜனநாய கூட்டணியில் திமுகவும் இடம்பெற்று இருப்பதால், தேர்தல் நடைபெற உள்ள அஸ்ஸாம், மேற்கு வங்காளம், மற்றும் கேரளா அரசியல்நிலை குறித்து கருணாநிதியிடம் தெரிவித்தேன்.
தமிழகம், பாண்டிச்சேரி பற்றி அவருக்கு தெரியும். தமிழகத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய பிரதமர் வாஜ்பாய் வருவது குறித்து மத்திய தேர்தல் குழுவிரைவில் கூடி முடிவெடுக்கும்.
அக்கூட்டத்திற்குப்பின் 5 மாநிலங்களின் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர கூட்டணி கட்சிகளின் தொகுதிகளிலும் பா.ஜ.க. தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள்.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறினாலும், திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. அந்த கூட்டணி பெரிய வெற்றியைப் பெறும் என தெரிவித்தார்.அவருடன் பா.ஜ.க.வின் தமிழக பொதுச்செயலாளர் இல.கணேசன், தேர்தல் பொறுப்பாளர் ராமாராவ் ஆகியோர் கருணாநிதியை சென்று சந்தித்தனர்.
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications