நத்தம் தொகுதியில் போட்டியிடுவாரா கு.ப.கிருஷ்ணன்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தமிழர் பூமி கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமானகு.ப.கிருஷ்ணன் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
இவரை எதிர்த்து அதிமுக சார்பில் நத்தம் தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ.விஸ்வநாதன் போட்டியிடுவார் என்றுதெரிகிறது.
திண்டுக்கல்லில் நடந்த அதிமுக கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாநில பொருளாளர் சீனிவாசன்கூறுகையில், நத்தம் தொகுதியில் வேட்பாளர் யார் என்று இன்னும் ஜெயலலிதா அறிவிக்கவில்லை.
ஜெயலலிதா யாரை நிறுத்தினாலும் அந்த வேட்பாளர், கு.ப.கிருஷ்ணனை தோற்கடிப்பது உறுதி என்றார்.
இதற்கிடையே திமுக சார்பில் நத்தம் தொகுதியில் போட்டியிட உள்ள கிருஷ்ணன் புதுக்கோட்டை மாவட்டத்தைச்சேர்ந்தவர். ஜாதி ஓட்டுக்களை மட்டும் நம்பி இவர் நத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications