பாண்டியில் 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக
சென்னை:
பாண்டிச்சேரியில் திமுக 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாண்டிச்சேரியில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப்பங்கீடுகள் முடிவடைந்துவிட்டன.
தொகுதிப்பங்கீடு குறித்த விவரம் வருமாறு:
திமுக 13
புதுவை மக்கள் காங்கிரஸ் 9
பாஜக 5
விடுதலை சிறுத்தைகள் 2
ஐக்கிய ஜனதா தளம் 1
பாணடிச்சேரியில் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வது குறித்து முதல்வர் கருணாநிதியும், கூட்டணிக் கட்சித்தலைவர்களும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தை இரண்டரை மணிநேரங்களுக்கு மேலாக நடந்தது.
பேச்சுவார்த்தை முடிவில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ரெட்டியார்பாளையம், கோட்டுச்சேரி,ஏனாம், பள்ளூர் மற்றும் மாஹே தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தட்டாஞ்சாவடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக போட்டியிடவுள்ள 13 தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்கு வராதகாரணத்தால் அந்த அமைப்பிற்கான தொகுதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, குறிஞ்சிப்பாடி தொகுதி மதிமுக தணிக்கை குழு உறுப்பினராக இருந்த பாஸ்கரன் நாயுடு உள்படபலர் திமுகவில் இணைந்தனர்.












Click it and Unblock the Notifications