கவனிப்பார் இல்லாததால் வயதான தம்பதி தற்கொலை
கோவை:
குழந்தை இல்லாத வயதான தம்பதியினர், தங்களை கவனிக்க ஆள் இல்லை என்ற சோகத்தில் விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டனர்.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). இவரது மனைவி ரங்கம்மாள் (60). இருவரும்விவசாயக் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே, இவர்கள் இருவரும் இறுதி காலத்தில் கவனிக்க ஆள் இல்லாமல்அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த இருவரும் விஷம் குடித்து இறந்தனர்.
மனைவியைப் பிரிந்தவர் தற்கொலை:
நோய்வாய்ப்பட்டு இறந்த மனைவியின் பிரிவைத் தாங்காத கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூரில் நெசவுத் தொழில் செய்து வந்தவர் ஜெகநாதன் (38). இவரது மனைவி ஜோதிமணி (35). ஜோதிமணிஅடிக்கடி உடல் நலம் இல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், அவர் நோய்வாய்ப்பட்டு கடந்த வாரம் இறந்து விட்டார். மனைவி இறந்த சோகத்தில் ஜெகநாதன்இருந்து வந்தார்.
பின்னர், அவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications