ரூ 15 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தென் மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (என்.சி.பி.) ரூ 15 கோடி மதிப்புளிள 15.057 கிலோஹெராயினை பறிமுதல் செய்து இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

இது குறித்த என்.சி.பி.யின் தென் மண்டல இயக்குநர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறுகையில், கைதுசெய்யப்பட்ட 4 பேருக்கும் சர்வதேச அளவில் தொடர்புள்ளது.

இவர்கள் மத்திய பிரதேசத்தில் இருக்கும் மன்ட்சாரையும், சென்னையையும் சட்டத்திற்கு புறம்பான வகையில்போதைப் பொருட்களை வைத்திருக்க பயன்படுத்தியுள்ளனர்.

தமிழக கடற்பகுதி வழியாக இலங்கைக்கு ஏராளமான அளவில் ஹெராயின் போதைப் பொருளை கடத்திவந்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் காசிலிங்கம் (வயது 45) என்பவர் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ளார்.1993ம் ஆண்டு இவரிடமிருந்து சுங்க இலகா அதிகாரிகள் 33 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

வருவாய் துறை அதிகாரிகள் 1.6 கிலோ எடையுள்ள ஹெராயினை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதே ஆண்டில் இந்த இரண்டுவழக்குகளிலுமிருந்து அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.

தென் மண்டல பிரிவு கடந்த இரண்டு ஆண்டுகளில் 184.487 கிலோ எடையுள்ள ஹிராயினை பறிமுதல்செய்துள்ளது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ 184 கோடி என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+