தி.மு.க. கூட்டணிக்கு இந்து முன்னணி ஆதரவு
ஈரோடு:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவாக இந்து முன்னணி பிரசாரம் செய்யும் என இந்துமுன்னணி தலைவர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக ஆலய மறுமலர்ச்சி பிரசார யாத்திரையில் இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன்ஈடுபட்டு வருகிறார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், இந்து முன்னணியின் மாநிலநிர்வாகக் குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வரவிருக்கும தமிழக சட்டசபை தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து விவாதித்துமுடிவெடுக்கப்பட்டது. அதன் படி வாஜ்பாய்க்கு உறுதுணையாதக இருக்கும் தி.மு.க.வை ஆதரிப்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. அரசை கவிழ்க வேண்டும் என எதிர்கட்சிகள் நினைக்கின்றன. சோனியா காந்தியை பிரதமாராக்கவேண்டும் என எண்ணி வருகிறார்கள்.
வாஜ்பாய்க்கு உறுதியாக இருப்பது தி.மு.க. தான். அதனால் மீண்டும் தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிஅமைக்க வேண்டும் என விரும்புகிறோம். அதனால் அவரை ஆதரிக்கிறோம்.
தி.மு.கவை ஆதரித்து தமிழகத்தில் இருக்கும் 234 சட்டசபை தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம்.
தமிழ்க்குடிமகன் செய்தது அரசியல் அநாகரீக செயல். தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பில் தொகுதிகொடுக்கப்படாததால் அவர் அ.தி.மு.கவில் போய் சேர்ந்துள்ளார். அவரை போன்ற கொள்கைவாதி யாருமேகிடையாது.
ம.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சித்தலைவர்களும் விட்டுக் கொடுத்து செயல்பட்டால் அவர்கள் மீண்டும் கூட்டணிசேரலாம் என நான் நினைக்கிறேன்.
தெஹல்கா டாட் காம் வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பா.ஜ.அரசுக்கு சோதனை வந்த போதும்அரசுக்கு உறுதுணையாக தி.மு.க. இருந்தது. கருணாநிதி தனது கொள்கையில் உறுதியாத இருக்கிறார். இதுதெகல்கா டாட் காம் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. இது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு.
இந்து முன்னணியின் தேர்தல் பிரசாரம் அடுத்த மாதம் 1ம் தேதி துவங்குகிறது என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications