ஏப்.10 ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடுகிறது ம.த.தே.
சென்னை:
மக்கள் தமிழ் தேசம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இந்த மாதம் 10ம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சிதலைவர் கண்ணப்பன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
எங்கள் கட்சிக்கு தி.மு.க. தலைமையிலான கூட்டணி 6 தொகுதிகள் ஒதுக்கியுள்ளன. எங்கள் கட்சி சார்பில்போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணியை நானும், பிறநிர்வாகிகளும் நடத்தி வருகிறோம்.
இந்த மாதம் 10-ம் தேதிக்குள் எங்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டி.யல் வெளியிடப்படும். கட்சி விரோதநடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் போட்டிபொதுக் குழு கூட்டவிருப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.
1991ம் வருட தேர்தலில் தமிழ்க்குடிமகனுக்கு இளையான்குடி தொகுதி வழங்கப்பட்டது. 1996ம் ஆண்டு தேர்தலில்அவருக்கு மதுரை மத்திய தொகுதி வழங்கப்பட்டது.
தமிழ் குடிமகனுக்கு தேர்தலில் தொகுதி மறுக்கப்படவில்லை. அவர் அ.தி.மு.கவில் சேர்ந்ததற்கு தொகுதி பிரச்சனைமட்டும் காரணமல்ல. உள்நோக்கமும் இருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் என்னை சேரும்படி பலமுறை அழைத்தவர் தமிழ்க்குடிமகன்தான். இப்போது அவர் என் மீதுபழி சுமத்துவது கண்டிக்கத்தக்கது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசார தொடக்கவிழா இந்த மாதம் 9ம் தேதி திருச்சியில் நடக்கிறதுஅதில் நான் பங்கேற்கவிருக்கிறேன் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications