கூடுதல் தொகுதிகள் கேட்கிறது எம்.ஜி.ஆர். கழகம்
சென்னை:
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தங்கள் கட்சிக்கு கூடுதல்இடங்கள் ஒதுக்குமாறு தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஆர்.எம்.வீரப்பன் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவைகள் ஆலந்தூர் மற்றும் நெட்டப்பட்டி ஆகியவையாகும்.
நாங்கள் 30 தொகுதிகள் கேட்டிருந்தோம். அவர்கள் 30 தொகுதிகள் ஒதுக்காவிட்டாலும் 5 தொகுதிகளாவதுதருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் தரவில்லை.
வெறும் இரண்டு தொகுதிகள் மட்டும் தந்திருப்பது எங்களது கட்சியையே அவமதிப்பது போன்றதாகும். அதனால்திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியிடம் கூடுதல் தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம்.
அதிமுகவை ஆட்சியமைக்க விடக் கூடாது என்பதே எங்களது கட்சியின் முக்கிய நோக்கமாகும் என்றார்ஆர்.எம்.வீரப்பன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications