சேலம் அருகே பஸ் - லாரி மோதல்: 40 பேர் சாவு
சங்ககிரி(சேலம்):
சேலம் அருகே அரசு பஸ்சும், லாரியும் நேருக்குநேர் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பயணிகள் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:
புதன்கிழமை இரவு ஈரோட்டில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தது.
இரவு 8 மணியளவில் பஸ் சங்ககரிக்கும், வைகுந்தம் என்ற இடத்துக்கும் இடையே வந்து கொண்டிருந்த போதுஎதிரே நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியில் மோதி விடாமல் இருப்பதற்காக பஸ்சை ரோட்டின் வலது புறமாகஓட்டிச் சென்றார் டிரைவர்.
அப்போது கல் ஒன்றின் மீது மோதி பஸ் தாறுமாறாக ஓடியது. டிரைவர் பஸ்சைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் திணறினார்.
பஸ் தாறுமாறாக ஓடியதால் எதிரே வந்த லாரி, பஸ் மீது மோதியது. இதையடுத்து லாரியின் டீசல் டேங்க் வெடித்துதீப்பிடித்தது.
பஸ்சில் இருந்த 100 க்கும் மேற்பட்ட பயணிகள் சுதாகரித்துக் கொண்டு அங்கும் இங்கும் சிதறி ஓடினார்கள்.
சிலர் பஸ்சின் ஜன்னல் வழியாக குதித்துத் தப்பித்து விட்டனர். 40 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகிஇறந்தனர்.
இதையடுத்து, சேலம், சங்ககிரி பகுதிகளிலிருந்து தீயணைப்புப் படை வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில்ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்தில்இறந்தவர்கள் குறித்த பெயர், இதர விவரங்கள் தெரியவில்லை.
காயமடைந்தவர்கள் குறித்த விவரம்:
மணி (27), சின்னபிள்ளை (30), பழனி (30), ஆர்.பழனியம்மாள் (35), ஸ்ரீஜா (18), ராஜம்மாள் (60), கந்தாயி (40),சீனிவாசன் (34), வேங்கா (55), மகேஸ்வரி (32), கிருஷ்ணமூர்த்தி (55).விபத்துக்குள்ளான பஸ்சில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவு உடல்கள் கருகிக் கிடந்தன.
கலெக்டர் விரைந்தார்:
சம்பவம் தெரிந்ததும் சேலம் மாவட்ட கலெக்டர் முகமது நசிமுதீன் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்றுபார்வையிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications