எய்ட்ஸ் ஊசி போட்டுக் கொல்வோம்: கவுடாவுக்குக் கொலை மிரட்டல்
பெங்களூர்:
முன்னாள் பிரதமர் தேவ கவுடாவையும், அவரது மகனையும் எய்ட்ஸ் ஊசி போட்டுக் கொல்வோம் என்று மிரட்டல்கடிதம் வந்ததையடுத்து தேவ கவுடா வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பனசங்கரி போலீஸார் கூறியதாவது:
தேவகவுடாவையும், அவரது மகன் ரேவண்ணாவையும் எய்ட்ஸ் ஊசி போட்டுக் கொலை செய்து விடுவதாக சிலநாட்களுக்கு முன் அவர்கள் வீட்டுக்கு மொட்டைக் கடிதம் ஒன்று வந்தது.
கடிதத்தைப் பார்த்த தேவ கவுடாவின் மகன் அதை பனசங்கரி போலீஸ் நிலையத்தில் கொடுத்து, இதுகுறித்துநடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார்.
இந்த வழக்கு தற்போது, ஹோலநர்சிபுரா போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மிரட்டல் கடிதம் கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்தது. அதில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, அவரது மனைவிசென்னம்மா, தேவ கவுடாவின் மகன் ரேவண்ணா, ஆகியோரை எய்ட்ஸ் ஊசி போட்டுக் கொலை செய்துவிடுவோம் என்று எழுதப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் ஹன்சூர் தபால் முத்திரை உள்ளது என்று போலீசார்தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 21 ம் தேதி கவுடாவின் மனைவி சென்னம்மாவும், அவரது மருமகளும் சிவாரத்திரிவிழாவை முன்னிட்டு கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்புகையில் அவர்கள் மீது ஆஸிட் வீசப்பட்டதுநினைவிருக்கலாம். இந்தச் சம்பவத்தில் சென்னம்மா படுகாயமடைந்தார்.
இதுதொடர்பாக தேவகவுடாவின் சகோதரரின் மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்குகுறித்து சி.ஓ.டி.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications