காஷ்மீர் பிரச்சனை: பேச்சுவார்த்தை நடத்த தீவிரவாதிகளுக்கு அழைப்பு
டெல்லி:
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண ஹூரியத் மாநாட்டுக் கட்சி மற்றும் தீவிரவாத அமைப்புக்களுடன்நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காஷ்மீரில் உள்ள அனைத்து தீவிரவாத அமைப்புகள் மற்றும் ஹூரியத் மாநாடு உள்ளிட்ட இயக்கங்களுடன்அரசியல் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தும்பொறுப்பு திட்டக்கமிஷன் துணைத்தலைவர் கே.சி.பந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தும் நோக்கில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது.பாகிஸ்தானுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது.
ஆனால், பாகிஸ்தான் எல்லை தாண்டிய தீவிரவாதத்தையும், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தையும் கைவிடவேண்டும். சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
