தேர்தல் பிரசாரம் செய்ய தமிழகம் வருகிறார் வாஜ்பாய்
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணி கட்சிகளுக்கு பிரசாரம் செய்வதற்காகபிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கையா நாயுடுஉள்ளிட்ட பல தலைவர்கள் தமிழகம் வருகிறார்கள் என தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல. கணேசன்கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மூன்று தலைவர்களும் இந்த மாதம் 23ம் தேதி முதல் தங்கள்பிரசாரத்தை துவக்குவார்கள். வெங்கையா நாயுடு தமிழகத்தில் 9 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுவார்.
தி.மு.க.தலைமையிலான தே.ஜ.கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கும் ம.தி.மு.க. மீண்டும் கூட்டணியில்இணைந்து தே.ஜ.கூட்டணி கட்சிகளுடன் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனாலும் பா.ஜ.க. எந்த விதமானசமரச முயற்சியிலும் ஈடுபடாது.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் சமரச முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. ஆனால் அவர் முயற்சியின் முடிவுஎன்ன என்பது தெரியவில்லை.
பா.ஜ.கவின் நாடாளுமன்ற குழு 21 சட்டசபை தொகுதிகளிலும், திருச்சி நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடும்வேட்பாளர் பட்டியலை இந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் வெளியிடும்.
இந்த பட்டியலில் சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில்போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாராகிவிட்டது.
தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ராமதாஸ் கெடு விதித்திருப்பது வேதனை அளிக்கிறது. இரண்டுநாட்களுக்குள் காங்கிரஸ் முடிவை அறிவிக்க வேண்டும் என அவர் காங்கிரசுக்கு கெடு விதித்துள்ளார்.
இது போல் அவர் கெடு விதித்திருப்பது அவர் சார்ந்துள்ள கூட்டணி தலைவர் ஜெயலலிதாவை விட அவருக்குஅந்த கூட்டணியில் அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை காட்டுகிறது.
தெஹல்கா டாட் காம் கூறியுள்ள குற்றச்சாட்டு தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி கட்சிகளின் வெற்றியை எந்தவிதத்திலும் பாதிக்காது. கருத்துக் கணிப்புகள் அ.தி.மு.க. தான் தேர்தலில் வெற்றி பெறும் என்பதற்கும் நான் எந்தமுக்கியத்துவமும் கொடுக்க விரும்பவில்லை என்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications