த.மா.கா.விலிருந்து விலக தயார்: சிதம்பரம்
சென்னை:
த.மா.கா. தன்னை கட்சியை நீக்கினால் விலக தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம்கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க. தலைமையிலான அணியுடன் தேர்தல் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துத.மா.காவிலிருந்து பிரிந்து த.மா.கா. ஜனநாயக பேரவை என்ற பெயரில் தனி கட்சியை துவக்கினார். அந்தபேரவை தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் எனவும் அறிவித்தார். இதனால் அவரை த.மா.காவிலிருந்து அவர்தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அவரது நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டு த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் விலக தயாராக இருப்பதாக சிதம்பரம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை விளக்கம் கேட்டு அனுப்பியநோட்டீசுக்கு பதில் அனுப்பி விட்டேன். நான் கட்சியிலிருந்து நீக்கப்படுவேனா என்பது குறித்து எனக்கு தெரியாது.ஆனால் நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.
நான் கட்சியின் கட்டுப்பாட்டை எந்த விதத்திலும் மீறவில்லை. எந்த முடிவு எடுப்பதாலும் தேர்தல் முடிவு தெரியும்வரை கட்சி தலைமை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க.- ம.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் விட்டுக் கொடுத்து, சமரசம் செய்து கொண்டு தேர்தலில் இணைந்துபோட்டியிட வேண்டும். இரண்டு கட்சிகளுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது வருந்தத்தக்க விஷயம். இந்த இருகட்சிகளிடையேயான சமரச முயற்சியில் ஈடுபடுமளவுக்கு நான் முக்கியமானவன் அல்ல.
நான் த.மா.கா.ஜனநாயக பேரவையின் சார்பில் தி.மு.க. கூட்டணிக்காக பிரசாரம் செய்வேன். த.மா.கா.வுக்காகபிராசாரம் செய்வதா என்பது அந்த தொகுதியை பொறுத்தது. நான் இன்னமும் த.மா.கா.வில் தான் இருக்கிறேன்என்றார்.
விளக்கம் கேட்டு த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பதிலுக்கு சிதம்பரம் பதிலளித்துள்ள நிலையில் எந்தவிதாமான முடிவும் எடுக்க முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications