ஏப்.9 ல் திருச்சியில் தி.மு.க. மாநாடு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சியில் இந்த மாதம் 9ம் தேதி திமுக மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டை தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி தேர்தல் பிரசாரத்தை முறைப்படி துவக்கிவைப்பார் என தமிழக உணவுத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக மாநாட்டிற்காக விரிவான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் தி.மு.க., தலைவர் கருணாநிதியைத் தவிர சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின், எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, பா.ஜ.க. மாநில தலைவர் கிருபாநிதி, எம்.ஜி. ஆர் கழக தலைவர்ஆர்.எம், வீரப்பன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசுவாமி, விடுதலை சிறுத்தைகள் நிறுவனத்கலைவர் திருமாவளவன் மற்றும் பல கூட்டணி கட்சி தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்என்றார்.

முன்னதாக அமைச்சர் நேரு அமைச்சர் புலவர் செங்குட்டுவன், எம்.எல்.ஏ.க்கள் கன்னையன், பரணி குமார்ஆகியோரோடு மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+