புலிகள் பகுதிக்கு சென்றது நார்வே தூதுக்குழு
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப்பேச்சுவார்த்தையை ஏற்படுத்தும் முயற்சியில் நார்வே நாடு இறங்கியுள்ள இந்நிலையில் அந்நாட்டு தூதர் ஜோன்வெஸ்ட்போர்க் உள்பட மூவர் குழு புலிகள் பகுதியான யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்றது.
இதுகுறித்து அரசுத்தரப்பு செய்திகள் குறித்த விவரம் வருமாறு:
அரசுக்கட்டுப்பாட்டில் இருக்கும் வுவனியா மற்றும் வடக்கு யாழ்ப்பாணம் பகுதிகளில் நார்வே தூதுக்குழுவைச்சேர்ந்த வெஸ்ட்போர்க் மற்றும் தாமஸ் ஸ்ட்ராங்க்லேன்ட் ஆகியோர் உள்பட மூன்று பேர் சென்றனர்.
அவர்கள், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் சண்டை குறித்து நேரில்சென்று தெரிந்து கொண்டனர். அவர்கள் புலிகள் தலைவர் பிரபாகரனைப் சந்தித்தார்களா என்பது குறித்து தகவல்எதுவும் தெரியவில்லை.
இதற்கிடையே, புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவும் வகையில் பழரசங்கள், மருந்து வகைகள், தேங்காய் எண்ணெய், பத்திரிக்கைகள், மலேரியா தடுப்பு மாத்திரைகள், வைட்டமின்மாத்திரைகள் ஆகியவற்றை அரசு அனுப்பி வைக்கத் தொடங்கியுள்ளது.
தற்போது, நார்வே அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்தநேரத்தில், இலங்கை அரசும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முயன்று வருகிறது.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறுகையில், விடுதலைப்புலிகளுக்கும், இலங்கைஅரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, மனிதநேய அடிப்படையில் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளதமிழர்களுக்கு உதவி செய்ய ஒப்புதல் அளித்துள்ளோம் என்றார்.
இதற்கிடையே, புலிகள் ஏப்ரல் 24 ம் தேதி வரை 4 வது முறையாக சண்டை நிறுத்தத்தை நீடித்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்ததக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications